அலங்கார மரபில் காவியபிரகாசத்தின் இடமும் பாணினியோடு அது கொண்ட உறவும்

in Article
Published on: 28 June 2019

B. Uma

Uma is a doctoral candidate at Jawaharlal Nehru University, New Delhi. Her work focuses on rhetoric in Tamil and Sanskrit literatures.

முன்னுரை 
சமஸ்கிருத இலக்கிய மரபின் மிகப்பழமையான நூலான நாட்டியசாஸ்திரத்தில் அணி இலக்கணம் பற்றிய சிறுகுறிப்பு உண்டு. அதனைத் தொடர்ந்து கி.பி. 6-8 ஆம் நூற்றண்டுகளில் தோன்றிய காவியலங்காரமும் காவியதர்சமும் தான் அணி இலக்கணம் பற்றி முழுமையாக விளக்கும் முதன்மையான அலங்கார நூல்களாகும். இவ்விரு அலங்கார நூல்களின் தொடர்ச்சியாக மூன்றாவதாகக் தோன்றிய நூல் காவியபிரகாசம் (கி.பி.11-12 ஆம் நூற்றாண்டு). காவியபிரகாசத்தின் ஆசிரியரான மம்மட்டர் தன் நூலில் அணியிலக்கணம் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசுகிறார். மம்மட்டர் காஷ்மீரில் பிறந்தாலும் தொடக்கக்கல்வி முதல் கல்வி பயின்றது பனாரஸில் தான். இந்துக்களின் புண்ணிய பூமியாகவும், சமஸ்கிருதக் கல்வி புகட்டும் புகழ்பெற்ற மையமாகவும் விளங்கும் பனாரஸில் வைத்துத் தான் மம்மட்டர் தன் காவியபிரகாசத்தைப் படைத்தார். 
கி.பி.11-12 ஆம் நூற்றான்டைச் சார்ந்த மம்மட்டர் இருநூல்கள் இயற்றியுள்ளார். அவை: காவியபிரகாசம், சப்தவியாபாரவிக்ரா என்பனவாகும். இவ்விரண்டு நூல்களில் காவியப்பிரகாசமே அவருக்கு பேரும்புகழும் பெற்றுத்தந்த நூல். புத்தரின் கோட்பாடுகளை பிபரியாயோக்தம்பீ என்னும் வடிவில்  காவியபிரகாசத்தில் பயன்படுத்தும் மம்மட்டர் இலக்கியத்திற்கும், இலக்கியப் படைப்பாளிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இலக்கணத்தோடு உவமைகளை அமைப்பது அவரின் தனிச்சிறப்பாக விளங்கிகிறது.பத்து இயல்களில் விரிவாக அமைந்துள்ள காவியபிரகாசம் பிற்காலத்தில் தோன்றிய ஏகவளி, சாகித்திய தருப்பணம், பிரதாபருத்திரியம் ஆகிய அலங்கார நூல்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. காவியபிகாசத்திற்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட உரைகள் வந்துள்ளன. அவ்வுரைகளின் எண்ணிக்கையே அலங்காரசாத்திர நூல்களில் காவியபிரகாசத்திற்கு உள்ள சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன. 
காவியபிரகாசத்தின் சிறப்பு: 

 • புசொற்பொருளால் கட்டமைக்கப்படும் கவிதையை குற்றங்களின்றி குணங்களோடு குறிப்பிடுதல்  
 • தொனி, இரசம் ஆகியன குறித்து நுட்பமாகக் கூறுதல் 
 • குறிப்புப்பொருள் அடிப்படையில் கவிதையை தொனி, குணபூதவியங்கியம், சித்திரம் என்று மூன்றாகப் பகுத்து, அவற்றின் உட்பிரிவுகளையும் விளக்குதல்.
 • மூன்று வகை குற்றங்களை விரிவாக விளக்குதல். 
 • ஓர் அணிக்குரிய  அனைத்து இலக்கணக் கூறுகளையும் குறிப்பிடுதல்.
 • ஆனந்தவர்த்தனரின் கோட்பாட்டை ஏற்றுப் பொதுமைப்படுத்துதல். 

காவியபிரகாசத்தின் அமைப்பு 
காவியபிரகாசத்தில் பத்து இயல்கள் உள்ளன. அவை:
1.    மங்களம்
2.    திஸ்ரக்சப்தவ்ர்ருதயக்
3.    அர்தவ்யஞ்சகதோச்யதே
4.    தொனிபரபேதாக்
5.    குணிபூதவ்யஞ்யப்பேதக்
6.    சித்ரகாவியாம்
7.    தோஷம்
8.    குணம்
9.    சப்தலங்காரம்
10.    அர்த்தலங்காரம் 
மேற்கண்ட பத்து இயல்களின் உள்ளடக்கம் பற்றி விரிவாகக் காண்போம். 
1.    மங்களம் (கடவுள் வாழ்த்து): காவியபிரகாசத்தின் முதல் இயலான பிமங்களம்பீ கவிதை எழுதுவதால் உண்டாகும் பயன், கவிதை எழுதுவதன் நோக்கம், காவிய வகைகள் போன்றவற்றைப் பற்றி ஐந்து சுலோங்களில் சுருக்கமாக விளக்குகிறது.இப்பகுதியின் தொடக்கத்தில் கவிதை சிறப்பாக அமைய வேண்டி பிரம்மனை வாழ்த்திப் பாடுகிறார். அதனைத்தொடர்ந்து கவிதை இயற்றுவதன் பயன்களாக மனதில் ஆனந்தம் உண்டாகுதல், அறிவு வளர்தல்,புகழ் பெறுதல், சொத்து வாங்குதல் முதலியவற்றைக் குறிப்பிடுகிறார். கவிஞனுக்குத் தேவை புகழ், வாசகனுக்குத் தேவை இன்பம், அந்த இன்பத்தின் மூலஊற்று கவிதையின் அணிகளில் தான் அமைந்துள்ளது. கவிஞனுக்குப் புகழையும், கவிதைக்கு அழகையும் வாசகனுக்கு இன்பத்தையும் ஊட்டுமாறு அணிகளை அமைப்பதே கவிதையின் தலையாய நோக்கம் என்கிறார். மேலும், இவர் காவியத்தரத்தை மூன்று வகையாகப் பகுக்கிறார். அவை: 1.உயர்தரம், 2.நடுத்தரம், 2.கடைநிலை என்பனவாகும். உயர்தரத்தில் கவிதையின் தொனி பற்றிக் கூறுகிறார். நடுத்தரத்தில் காவியத்திற்குத் துணையாக இருப்பவை என்பதை விவரிக்கிறார். கடைநிலையில் குறைபாடுள்ள பொருள், ஒலிபுலன் சார்ந்தவைப் பற்றிக் கூறுகிறார்.

2.    திஸ்ரக்சப்தவ்ர்ருதயக்: திஸ்ரக்சப்தவிருதயக் என்ற இவ்வதிகாரத்தில் சொற்களைப் பயன்படுத்தும் முறை பற்றி விளக்குகிறார். சொற்களுக்கு மூன்று வகையான ஆற்றலுண்டு. அவை: இடுகுறியாற்றல் (அபிதா), ஆகுபெயராற்றல் (இலக்ஷணா), குறிப்பாற்றல் (வ்யஞ்சனை).  கங்கைநதி என்ற சொல் நேரடியான பொருளைத் தருவதால் அது வாக்கியம். கங்கையிலுள்ள இடைச்சேரி எனும்போது கங்கைநதிக் கரையில் உள்ள இடைச்சேரி என்று பொருள்படுகிறது. கங்கை நதிக்குள் இடைச்சேரி இருக்கமுடியாது. ஆதலின் அதன் சார்பினைக் காட்டுவதால் இது ஆகுபெயறாற்றல் ஆகும். கங்கை கங்கைதான் எனும்போது, கங்கைதான் என்ற சொல் குறிப்பினால் எத்தனையோ பொருள்படும். அது அதன் நீளஅகலங்கள், புனிதத்தன்மை, நீர்வளம், நீர்ப்போக்குவரத்து முதலிய பல பொருள்களை குறிப்பால் உணர்த்துகிறது. ஆதலின் இது குறிப்பு(வியங்கியம்) எனப்படும். இடுகுறியாற்றல் உருவாக்கும் தத்துவமே பிதொனிபீ என்கிறார் ஆனந்தவர்த்தனர். ஆனால் அப்படியில்லை என்ற கருத்தும்  அக்கால அறிஞர்களிடம் உண்டு. அதையொட்டி சுவையான விவாதங்கள் நிறைந்த அலங்கார சாத்திர நூல்களும் எழுந்தன. பிதொனிபீ என்பது பிஒலிபீ என்று பொருள்படும். ஒலிகளை எல்லாம் எழுத்தில் வடிவமைக்க முடியாது. உணர்ச்சிகளை எல்லாம் ஒரு மொழியால் எடுத்தக்காட்ட முடியாததுபோல, ஒலி வேறுபாடுகளையும், ஒலி வேறுபாட்டின் மூலம் உருவாகும் கருத்து வேறுபாடுகளையும் எழுத்தில் வடிவமைக்க முடியாது. ஆதலின் கவிஞர்கள் தம் கதாப்பாத்திரங்களின் மூலம் பேசும் கருத்துக்களை வெறும் வாக்கியமாகவோ, நேரடிபொருள் கொண்டவையாகவோ மட்டும் கருதினால் இலக்கியச் சுவை இருக்காது என்கிறார் மம்மட்டர். 
    முதல் வகையான இடுகுறியாற்றல், இயல்பான பண்பு(வஸ்துதர்ம:), பேச்சாளர் மூலம் சொல்லப்படும் பண்பு என இரு வகைப்படும். இவற்றில் இயல்பான பண்பு    இரண்டு வகைப்படும். அவை, பொருள்(ப்ராணப்ரத:), காரணத்தைத் தருகின்ற சிறப்புப் பொருள்(விசேஷதானஹேது:) என்பனவாகும். இவை ஜாதி, குணம் என்ற பொருள்களில் வருகின்றன. பேச்சாளர்கள் மூலம் சொல்லப்படும் பண்பு ஸாத்ய(க்ரியா) எனப்படும். இதுபோன்றே ஆகுபெயராற்றல் சுத்த இலக்ஷ்ணா, உபதான இலக்ஷ்ணா, இலக்ஷ்ண இலக்ஷ்ணா, ஆரோப இலக்ஷ்ணா, சாத்யவசனா இலக்ஷ்ணா, கௌணி இலக்ஷ்ணா என ஆறு வகைப்படும்.
3. அர்தவ்யஞ்சகதோச்யதே: மூன்றாவது இயலான பிஅர்தவ்யஞ்சகதோச்யதேபீ மிவில் வாக்கிய அமைப்பில் பின்பற்ற வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள் பற்றிப் பேசுகிறார். இவ்வியல் பத்து சுலோகங்களில் அமைந்துள்ளது. 
முக்கியமான மூன்று விஷயங்கள்:

 • ஒலிவேறுபாடு(கூஙூஞ்ச்ஙூஹஞ்கூச்ஙூ)- குரலில் ஏற்றம் இறக்கம் கொடுக்கும் ஒலிகள். 
 • சூழல் (ச்ஷஷஹசூகூச்ஙூ)- காலம்,இடம்,வெளிப்படுத்தும் முறை ஆகிய நிலையில் அமையும்  சூழல்.
 • தொனி (சூஞிகீகீக்சூஞ்கூச்ஙூ)மி உட்கருத்தின் குறிப்புப்பொருள் நயத்தோடு,  சொற்களின் தோற்றத்தை இணைத்தல்.

4. தொனி: பன்னிரெண்டு சுலோகங்கள் கொண்ட நான்காவது இயல், தொனி, ரசம் முதலிய  காப்பியச் சுவைகள் பற்றிப் பேசுகிறது. மெய்ப்பாட்டில் இடம்பெறும் பாவங்கள் பற்றி,  பரதருக்குப் பின் மம்மட்டரே விளக்கமாகக் குறிப்பிடுகிறார். பிரம்ம தேவன் குறிப்பிட்ட சுவைகள் எட்டு. அவை: சிருங்காரம், நகைச்சுவை (ஹாஸ்யம்), அவலம் (கருணம்), சினம் (ரௌத்திரம்), வீரம் (வீரஹ), அச்சம் (பயானகம்), அருவெறுப்பு (பீபச்சம்), அற்புதம் ஆகியனவாகும். 
சம்போகச் சிருங்காரம், விப்ரலம்பாரச் சிருங்காரம், அபிலாஷச் சிருங்காரம் (ஆசை), விரஹ சிருங்காரம் (பிரித்தல்), ஈஸ்ர்யாச் சிருங்காரம் (பொறாமை), பிரவாசம், சாபம் என ஏழுவகை சிருங்காரம் பற்றி விளக்குகிறார். அதனைத் தொடர்ந்து எட்டு வகைப் ஸ்தாயிபாவங்களைக் குறிப்பிடுகிறார். அவை: இரதி(காமம்), நகை, சோகம், குரோதம், உற்சாகம், பயம், சுகுப்பை(அருவெறுப்பு), வியப்பு. மற்றொரு அலங்கார ஆசிரியரான சஞ்சரியோ பாவங்கள் 33 வகைப்படும்  என்கிறார். சில இடங்களை பாவத்தை தனியாகவும், சில இடங்களில் ரசத்தோடு இணைத்து பிரசபாசபாவாபாசௌபீ வாகவும் அவர் விளக்குகிறார். 
பாவம் பின்வரும் நான்கு நிலைகளில் வரும் என்கிறார் மம்மட்டர்.

 • மனக்கிளர்ச்சியின் அமைதி (அஙீஙீஹட்ஙுக்ஙூஞ் ச்கி க்ஙுச்ஞ்கூச்ஙூ)
 • மனக்கிளர்ச்சியின் வெளிப்படை (ஙஹஙூகூகிக்சூஞ்ஹஞ்கூச்ஙூ ச்கி க்ஙுச்ஞ்கூச்ஙூ) 
 • மனக்கிளர்ச்சியின் இணைவு (இச்ஙூங்ஞிஙூஷஞ்கூச்ஙூ ச்கி க்ஙுச்ஞ்கூச்ஙூ) 
 • மனக்கிளர்ச்சியின் கூட்டுச்சேர்க்கை (அக்ஷஙுகூஞூஞ்ஞிசுக்சூ ச்கி க்ஙுச்ஞ்கூச்ஙூ)  

 5. குணிபூதவ்யஞ்யப்பேதம்: இவ்வியல் காவியத்திற்கு(கவிதைக்கு)அடிப்படையாக விளங்கும் எண்வகைக் கூறுகள் பற்றி விவரிக்கிறது. அவை:

 • கருத்தைத் தெளிவாகக் கூறுதல்
 • நேர்த்தியாகக் கூறுதல் 
 • முழுமையாகக் கூறுதல்
 • எளிமையாகக் கூறுதல்
 • ஐயத்திற்கு இடமின்றி கூறுதல்
 • எல்லாப் பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கூறுதல்
 • பேச்சு வழக்கிற்கு முதன்மை அளித்தல் 
 • துணைக் கூறுகளையும் குறிப்பிடுதல் 

6. சித்ரகாவியம்: சித்ரகாவியம் என்பது செய்யுளை (காவியத்தை) மேலும் மெருகூட்டுவதாகும்.  செய்யுளின் தனிச் சிறப்புகளான உவமை, உவமேயம், சொற்களைக் கையாளும் திறன் போன்றவை செய்யுளுக்கு அணிகலன்களாகவும் சித்ரகாவியம் அலங்காரமாகவும் அமையும் என்கிறார் மம்மட்டர். இவ்வியலில் இருவகை சித்ராலங்காரம் பற்றிப் பேசுகிறார். 

 • சொல்வளத்தால் வரக்கூடிய அழகு 
 • பொருள் வளத்தல் வரக்கூடிய அழகு. 

ஒரு பெண்ணின் முகத்தை வருணிக்கும் போது அவள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அழகுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்களே என்று கூறுவது போல, சில கவிஞர்கள் பெயர், வினை முதலிய சொற்களை அலங்காரம் மிக்க அணிகலன்களாகப் பயன்படுத்துகின்றனர். சில கவிஞர்கள் அணிகலன்களோடு, உவமை, உவமேயம் முதலிய பிற அலங்காரங்களையும் பயன்படுத்துகின்றனர். எனவே நாம் அவ்விரண்டு முறையையும் எடுத்துக்கொள்வதே சிறந்ததாகும் என்கிறார் மம்மட்டர்.   

7. தோஷம்: இவ்வியல் காவிய உருவாக்கத்தில் ஏற்படும் குற்றங்கள் (தோஷங்கள்) பற்றிப் பேசுகிறார் மம்மட்டர். மூன்று வகைக் குற்றங்களை முதன்மையான குற்றங்களாகக் குறிப்பிடுகிறார். அவை:

 • சொல் குற்றம்
 • பொருள் குற்றம் 
 • தொடர் குற்றம்

சொல்குற்றம் (ஈக்கிக்ஷஞ் ச்கி ஞ்குக் ரச்சுக்ஷ): சொல்லில் நிகழும் குற்றங்களாக 16 வகைக் குற்றங்களைக் குறிப்பிடுகிறார். அவை: சந்தோசமற்றது, வருணிக்கத் தேவையில்லாததை வருணித்தல், தெளிவற்ற நிலை, தரக் குறைபாடு, ஒரு வாக்கியமாக இணைக்காமல் ஒரு அடியை முழுமைக்காகக் கூறல், உபயோகம்மில்லாததை கூறல், வெளிப்படுத்தும் முறை, முறையற்ற அல்லது முக்கியமில்லாதது, பொருளை அடக்குவது, போதுமான அளவில் கூறாமை, ஐயத்துடன்  கூறல், சம்மந்தமில்லாமல் கூறல், தேவையில்லாத பாகுபாடு, வெறுக்கத்தக்க கூறல் என்பனவாகும்.   
பொருள் குற்றம் (ஈக்கிக்ஷஞ்சூ ச்கி ஞ்குக் ஙக்ஹஙூகூஙூகீ): சொல்லும் தொடரும் உருவாக்கும் பொருளில் நிகழும் குற்றங்களாக 23 வகை குற்றங்களைக் குறிப்பிடுகிறார். பொருத்தமற்ற, தெளிவற்ற, முரண்பட்ட, சீரற்ற, ஒழுங்கற்ற, கடினமான, சந்தேகமான, விஞ்ஞானபூர்வமற்ற, அமைதியற்ற, முழுமையற்ற, முறையற்ற என அவை வரும்.
தொடர் குற்றம் (ஈக்கிக்ஷஞ் ச்கி ஞ்குக் சூக்ஙூஞ்க்ஙூஷக்): தொடர் அல்லது வாக்கியத்தில் நிகழும் குற்றம் என 21 வகைக் குற்றங்களைக் குறிப்பிடுகிறார். முரண்பாடான சொற்கள், சொல் குறைவு, சிறப்பற்ற சொற்கள், கோர்வையற்றது, குழப்பம் நிறைந்த, வார்த்தை இடமாற்றம் என வாக்கியக் குற்றங்கள் நிகழும் என்கிறார். 

8. குணமலங்காரம்:  தரப்படுத்தப்பட்ட சில நிலையான அழகுகளை இனிய முறையில் ஒருங்கிணைக்கும் தன்மைக்குக் குணம் என்று பெயர். கவிதையின் உயிராகக் கருதப்படும் குணம் பல நெறிகளுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. குணத்தைப் பற்றி முதலில் பேசியவர் பரதர். இவர் செறிவு (ஓஜம்), தெளிவு (பிரசாதம்), சிலேஷம், சமநிலை  (சமதை), சமாதி, இனிமை (மாதுரியம்), ஒழுகிசை (சௌகுமாரியம்), உதாரதை, அர்த்தவ்யக்தி, காந்தி என்ற பத்து வகையினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவரின்  வழியினராகிய பாமகர் முதலானோர் மூன்று குணங்களையே தலைமையாகக் கொண்டு கூறினார்கள். குணத்தை இரீதியோடு தொடர்புபடுத்தி அதைக் கோட்பாடாக உருவாக்கியவர் தண்டி.  பாமகரும் தண்டியும் தனிப்பட்ட குணங்களுக்குக் கூறிய விளக்கங்கள் பெரிதும் தெளிவுடையனவல்ல என்று கூறி வாமனர் முதன் முதலாகக் குணங்களைச் சப்தகுணம், அர்த்தகுணம் எனப் பிரித்து அவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கொடுத்துள்ளார். இவருக்குப் பின்னால் வந்த மம்மட்டர் இவரின் வகைப்பாட்டை மறுக்கிறார். பரதர், தண்டி, வமானர் குணத்தைப் பத்து வகை என்று குறிப்பிட்டிருந்தாலும் மம்மட்டர் மூன்று வகையான குணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளார். அவை மாதுரியம், ஓஜஸ், பிரசாதம் என்பனவாகும். 
    மம்மட்டர் குணத்தைப் பற்றி விளக்குகையில் எழுத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு நாம் காவியத்தின் தன்மையை மதிப்பீடு செய்ய முடியாது என்றும் அவற்றின் உள்ளே கூறப்பட்டுள்ள இரசத்தைக் கொண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும்  என்றும் கூறுகிறார். மேலும் இனிமை என்பது மனகிளர்ச்சி உண்டாக்குகின்ற சிருங்காரம் போன்றது. மதுரம் என்பது இரசவாதம். அதாவது சுவை நிறைந்தது. மேலும் இவை மனதை உருக்கத்தக்க நிலையிலும், காதலின் பிரிவிலும், அமைதியான நிலையிலும் தோன்றும் என்கிறார். பாமகர் இனிமை பற்றிக் கூறும்போது இனிய ஓசை என்கிறார். அதாவது பிசிரவியம்...காவியம்...மதுராமிஷ்யதேபீ(காவிய.அல.2.3) என்பதே பாமகர் கருத்தாகும். இதனை மம்மட்டர் மறுக்கிறார். பாமகர் ஓஜஸ், பிரசாதம் என்ற இரண்டு குணங்களைக் கொண்டே இனிமையை விளக்கியுள்ளார் என்கிறார். ஓஜஸ், பிரசாதம் என்பது வெவ்வேறு குணங்களாகும் என்பதே இவருடைய கருத்தாகும்
மேலும் இவ்வியலில் 9 வகையான குணங்களைப் பற்றியும் கூறுகிறார்.அவை: சிலேஷ, சமாதி, உதாரதா, பிரசாத, மாதுர்யம், அர்த்தவ்யக்தி, சாம்யம், சௌகுமார்யம், காந்தி முதலியனவாகும். அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.
சிலேஷ (ஷச்ஹஙீக்சூஷக்ஙூஷக்):  
வாக்கியத்தில் எளிமையான ஒலிகளைக் கொண்டு பாடல்களை இயற்றுவது சிலேஷ.
சமாதி (சூஙுச்ச்ஞ்குஙூக்சூசூ):     
ஒரு பொருள்மேல் மற்றொரு பொருளின் குணங்களை ஏற்றிக் கூறுவது சமாதி. இது காவியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கின்றது. 
உதாரதா (ஙுஹகீஙூகூகிகூஷக்ஙூஷக்):
மிக உயர்ந்த குணங்களைப் பற்றி வருணிப்பது உதாரதா.
பிரசாதம் மி (சூகூஙுசிஙீகூஷகூஞ்ட்):
எளிமையான சொற்களைக் கொண்டு குணத்தை விளக்குவது. 
மாதுர்யம் (சூஞுக்க்ஞ்ஙூக்சூசூ):
பாடல் முழுவதும் சுவை மிகுந்ததாக இருக்கக்கூடியது பிமாதுர்யம்பீ. பிமாதுர்யம்பீ என்பதற்கு அழகு என்று பொருள். 
அர்த்தவ்யக்தி (ஷஙீக்ஹசுஙூக்சூசூ ச்கி ஙுக்ஹஙூகூஙூகீ): 
ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்கள் பொருள் தெளிவு உடையதாக இருத்தல்.
சாம்யம்(ஞிஙூகூகிச்சுஙுகூஞ்ட்):
செய்யுளில் உள்ள சொற்கள் அனைத்தும் சமமாக வருவது பிசாம்யம்பீ ஆகும். 
சௌகுமார்யம் (சூச்கிஞ்ஙூக்சூசூ): 
பிசௌகுமார்யம்பீ என்பது எளிமையான வார்த்தைகளைக் கொண்டுப் பாடலை இயற்றுவது. இதில் கடினமான சொற்கள் சிறுபான்மையாக வரலாம். 
காந்தி (சிச்ஙீகூசூகு): 
பிகாந்திபீ என்பது எல்லோரையும் கவரக்கூடியது. 
9. சப்தலங்காரம்: ஒன்பதாவது இயலான சப்தலங்காரத்தில் முக்கியமான காவிய நெறியான புவக்ரோத்திபூ பற்றிக் குறிப்பிடுகிறார். பிவக்ரோத்திபீ என்பது கவிஞன் தன் கருத்தை மறைமுகமாக உணர்த்துவதாகும். இது காவிய (கவிதை) உருவாக்கத்தின் அடிப்படையாக விளங்குகிறது. வக்ரோத்தியை இரு வகையாகப் பகுக்கிறார். ஒன்று  பல பொருள்பட மொழிதல், மற்றொன்று பல ஒலிவேறுபாடு கொண்டு மொழிதல் என்பதாகும். மேலும், வைதர்பம்,கௌடம்,பாஞ்சாலி ஆகிய மூன்று நடை பற்றியும் விளக்குகிறார். சப்தலங்காரத்தில் வைதர்பம், கௌடம், பாஞ்சாலி எனும் மூன்று வகையான செய்யுள் நெறிகளும், வக்ரோத்தி, மடக்கு, சிலேடை, சித்திரக் கவி முதலான சொல்லணிகளும் விளக்கப்பட்டுள்ளன. கவிஞன் தன் கருத்தை மறைமுகமாக உணர்த்துவதற்கு வக்ரோத்தி என்று பொருள். இது இரண்டு வகைப்படும். அவை:   

 • பல பொருள்பட மொழிதல் 
 • பல ஒலிவேறுபாடு கொண்டு மொழிதல்  

பிமடக்குபீ என்பது  எழுத்துக்களின் தொகுதியாகும். எழுத்தாலும், சொல்லாலும், இடையிடாதும், இடையிட்டும் வந்து வேறு பொருளைக் கொடுப்பது மடக்கு அலங்காரமாகும். இது ஒன்பது வகைப்படும். அவை:  

 • முதல் அடியில் உள்ள சொல் மீண்டும் இரண்டாவது அடியில் வருவது. 1      2 
 • முதல் அடியில் உள்ள சொல் மீண்டும் நான்காவது அடியில் வருவது. 1       4 
 • முதல் அடியில் உள்ள சொல் மீண்டும் மூன்றாவது அடியில் வருவது. 1      3 
 • இரண்டாவது அடியில் உள்ள சொல் மீண்டும் மூன்றாவது அடியில் வருவது. 2      3  
 • இரண்டாவது அடியில் உள்ள சொல் மீண்டும் நான்காவது அடியில் வருவது. 2     4 
 • மூன்றாவது அடியில் உள்ள சொல் மீண்டும் நான்காவது அடியில் வருவது. 3     4 
 • முதல் அடியில் உள்ள சொல் மீண்டும் எல்லா அடியிலும் வருவது. 1    அனைத்தும் 
 • முதல் அடியில் உள்ள சொல் மீண்டும் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது  அடியில் வருவது. 1       2, 3, 4
 • முதல் அடியில் உள்ள சொல் மீண்டும் நான்காவது இரண்டாவது மூன்றாவது அடியில் வருவது. 1       4, 2, 3 

இவ்வாறு ஒரு சொல் ஒரு அடியில் ஒன்பது வகையாக வந்து பொருள் தரும். 
    
10. அர்த்தலங்காரம்: இவ்வியலில் மொத்தம் 56 செய்யுட்களும் 214 எடுத்துக்காட்டுப் பாடல்களும் உள்ளன. அணிகளின் இலக்கணத்தை சான்றுப்பாடல்களுடன் விளக்குகிறார். உவமை முதல் பிறிதின்குணம் ஈறாக மொத்தம் 62 அணிகளைப் பற்றியும் அவற்றின்  உள்வகைப்பாடு பற்றியும் விவரிக்கிறார். உவமையை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். ஒன்று பூர்ணம், மற்றொன்று லுப்தா. இதில் பூர்ணாவை சிரௌதி(சொல்லிருந்து வருவது), ஆர்த்தி (பொருள் சார்ந்தது) என இருவகைப்படுத்துகிறார். வாக்கியம், தொகைச் சொல், பெயர்சொல்  என்ற மூன்று வகையில் உபமானம், உபமேயம், வாச்சகப்பதம், சமாதம் இவை நான்கும் குறையாமல் முழுமையாக வருவது சிரௌதி ஆகும். இவை நான்கில் ஏதாவது ஒன்று குறைந்துக் காணப்படுவது ஆர்த்தியாகும்.  வகையைச் சாறும். இதைப் போன்றே லுப்தாவை 19 வகையாகப் பகுக்கிறார்.     
நாடக இலக்கணத்தை விளக்க பிநாட்டியசாஸ்திரம்பீ இயற்றிய பரதர் அதன் ஒரு கூறாக அணியை விளக்கினார். பரதர் உவமை, உருவகம், தீபகம், யமகம் என்னும் நான்கு அணிகளை மட்டும் குறிப்பிட்டு அவை நாடகவியலின் மொழிசார் புலப்பாட்டின் அடிப்படையில் விளக்குகிறார். காலப்போக்கில் நாடகத்துடன் தொடர்புடைய காவியத் தோற்றத்தினால் அதனோடு இணைந்து, அதன் பரந்த தளங்களின் ஊடாக அணிகள் பெருகின. பிஅக்கினிப் புராணபீமும் புராணக் கூறுகளுள் ஒன்றாக அணியை விளக்குகிறது. இவ்விரு நூல்களும் அணியைப் பிற கூறுகளுள் ஒன்றாக விளக்குகின்றன. அவற்றைத் தொடர்ந்து பாமகரின் பிகாவியலங்காரம்பீ, தண்டியின் பிகாவியதர்சம்பீ ஆகியன அணியிலக்கணத்தை மட்டுமே விளக்கும் தனிப்பெரும் அணியிலக்கண நூல்களாகும். அம்மரபைப் பின்பற்றி மம்மட்டர் இயற்றியது தான் பிகாவியபிரகாசம்பீ ஆகும். மம்மட்டர் இரசம், அணி, குணம், இரீதி, தொனி, அனுமிதி, வக்ரோத்தி, ஔசித்தியம் முதலிய இலக்கியக்கோட்பாடுகளை அணியிலக்கணத்தோடு இணைத்தார். 
காவிய அமைப்பு பற்றி விரிவாக விளக்கும் மம்மட்டர், காவிய உருவாக்கத்திற்குத் தேவையான அணிகள், நடைச் சிறப்பு, சுவை, மெய்பாடுகள் முதலியன பற்றியும் பேசுகிறார். மகாகவியம், குறுங்காவியம் ஆகியவற்றின் இயல்பு, பாத்திரப்படைப்பு முதலியன பற்றி ஏதும் கூறாதது வியப்பளிக்கிறது.     
அணியியல் விளக்கத்தில் மம்மட்டருக்கும் பாணினிக்கும் உள்ள உறவு: 
    சமஸ்கிருத முதல் இலக்கணமான அஷ்டாத்தியாயின் ஆசிரியர் பாணினிக்கும், காவியபிரகாசத்தின் ஆசிரியரான மம்மட்டருக்கும் ஏறத்தாழ 1500 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. கி.மு.4-5ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாணினியின் அணியியல் கருத்துக்கள் சிலவற்றை கி.பி.10-11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மம்மட்டர் தன் நூலில் பின்பற்றுகிறார். குறிப்பாக, உவமை அணியில்  உள்ள எடுத்துக்காட்டுப்பாடல்கள் பெரும்பாலும் பாணினி  விதிகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. பாணினி குறிப்பிடும் தத்தித ஒட்டு வகைகள், உவமை உருபுகளான இவ, துல்யம், தொகை, பரஸ்மைபதி,  ஆத்மானேபதி முதலிய விதிகளை மம்மட்டர் பின்பற்றுகிறார்.     
மூன்றாம் வேற்றுமைச் சொல்லுக்குப் பின் பிஅதனோடொக்கும்பீ என்ற பொருளில் பிவதிபீ(வத்) ஒட்டு வரும் (பிதேன துல்யம் க்ரியா சேத் வதிபீ (அஷ்டா:5.1.115)) என்றும், பிவதிபீ என்னும் ஒட்டு(சொல்) பிஒத்த செயலைபீக் குறிக்கும் என்றும் கூறுகிறார் பாணினி. இதனை மம்மட்டரும் வழிமொழிகிறார். அதாவது பிஅதனோடொக்கும் முகம்பீ (பிதேன துல்யம் முகம்பீ/ तेन तुल्य मुखम् /கிஹஷக் கூசூ சூகூஙுகூஙீஹசு ஞ்ச் ஞ்குஹஞ்)  என்றும், பிஅதற்குச் சமமானது இதுபீ (பிஇதம் ச தச்ச துல்யம்பீ/ इतम् च तच्च तुल्यम् मुखम् /ஞ்குஹஞ் கூசூ க்சீஞிஹஙீ ஞ்ச் ஞ்குகூசூ) என்றும் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் பிஒத்த செயல்பீ பற்றிக் கூறும் போது, பிபிராமணனைப் போன்று நடக்கிறான்பீ (பிப்ராஹ்மண் வத் தீதே க்ஷப்ரிய:பீ) என்கிறார் மம்மட்டர்.  
ஆறாம், ஏழாம் வேற்றுமைக்குப் பின் வரும் பிவேதிபீ ஒட்டு பிபோலபீ என்னும் பொருளில் அமையும் என்கிறார் பாணினி (பிதத்ர தஸ்யேவபீ (அஷ்டா:5.1.116)). பாணினியின் இந்த விதிப்படியே மம்மட்டரும் எடுத்துக்காட்டுப் பாடலை அமைக்கிறார். பின்வருவன மம்மட்டரின் எடுத்துக்காட்டுப் பாடல் வரிகள் அதனைக் காணலாம்.
மது2ராவத் ஸ்ருக்4னே ப்ராகார ஸ்ருக்கன: 
(மதுராவில் இருப்பதைப் போல் காணப்படும் சுவர்கள்) 
யக்ஞத3த் தஸ்யேவ தே3வதத்தஸ்ய
(யக்ஞத3த்தனுடைய பற்களைப் போல உள்ளன தேவதச்சனின் பற்கள்)
இரண்டாம் வேற்றுமைக்குப் பின் வரும் பிவதிபீ என்னும் ஒட்டு பிஅதற்குத் தகுந்தபீ என்னும் பொருளில் அமையும் என்கிறார் பாணினி (தத3ர்ஹம் (அஷ்டா:5.1.117)). இவ்விதிப்படி மம்மட்டர், பிஅரசனுக்குத் தகுந்த பாதுகாப்புபீ (ராஜவத் பாலனம்) என்றும், பிமுகத்திற்குப் பொருந்தும் சந்திரன்பீ (சந்த்ரவத் முகம் /चन्द्रवत मुखम्) என்றும் விளக்குகிறார்.   
தொகை பற்றிய விளக்கம்: இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பதங்களைக் கொண்டு அமையும் தொகை, அதன் உறுப்புகள் அனைத்தும் உணர்த்தும் பொருளை தொகுத்துக்கூறுவதாய் அமைந்தால் அது பஹீவ்ரீஹி ஆகும் என்கிறார் பாணினி (அனேக அன்ய பதார்தே (அஷ்டா:2.2.24)). இக்கருத்தை உள்வாங்கிய மம்மட்டர் தன்னுடைய பாணியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
தொகை என்பது மூன்று முக்கியக் கூறுகளைக் கொண்டது. அதாவது உவமை, குணம், பொருள் ஒப்பீடு (ச்ஸங்க்ஷஞ் ஷச்ஙுசிஹசுக்க்ஷ) ஆகிய மூன்றும் பொருளை உணர்த்த வேண்டும் என்கிறார் (திரிலோபேச ஸமாஸகா3 (காவ்.பொருள்:20)).மேலும், தொகையை பிஇருபதத் தொகைபீ, பிமூன்று பதத்தொகைபீ என இரண்டாகப் பகுக்கிறார். பிஇருபதத் தொகைபீ என்பது உபமானம், பொதுக்குணம் ஆகிய இரண்டின் வழி பொருள் உணர்த்தும். இதனை பாணினி உபமானமும்,பெயர்ச்சொல்லும் இணைந்து பொருள் உணர்த்தும் என்கிறார் (அஷ்டா:2.1.55). பிமூன்று பதத்தொகைபீ என்பது உபமானம், பொதுக்குணம், உபமேயம் ஆகிய மூன்றாலும் பொருள் உணர்த்தப்படுவதாகும் என்கிறார் மம்மட்டர். 
வாதி லுப்தா (சொற்குறைவு):
வாதி லுப்தா பற்றிய விளக்கத்தில் மம்மட்டர் பாணினியைப் பின்பற்றுகிறார். பாணினி பெயர்ச்சொற்களில் வரும் ஒட்டுகளை மூன்றாகப் பகுக்கிறார். அவை: பரஸ்மைபதி, ஆத்மானேபதி, உபயபதி என்பனவாகும். இதில் மம்மட்டர் பரஸ்மைபதி,ஆத்மானேபதி என்ற இரண்டு வகையைக் குறிப்பிடுகிறார்.பரஸ்மைபதியை பிக்யச்பீ என்றும்  ஆத்மானேபதி பிக்யங்பீ என்றும் குறிக்கிறார். 
உபமானத்தைக் குறிக்கும் வேற்றுமை உருபுகளில் முடியும் சொல்லைத் தொடர்ந்து பிக்யச்பீ ஓர் உறுப்பாக இணையும். அச்சொல் பிநடந்துகொள்பீ என்ற பொருளில் அமையும் என்கிறார் பாணினி (உபமானாதா3சாரே (அஷ்டா:3.1.10)). இவ்விதியைப் பின்பற்றி மம்மட்டர் கூறும் எடுத்துக்காட்டுப்பாடல் வரி:  
புபுத்ரமிவ ஆசரதி சாத்ரம்பூ
(பிள்ளையைப் போன்று நடந்துகொள்கிறான் மாணவன்) 
புபுத்ரீயதி சா3த்ரம்பூ
 (மாணவனைப் பிள்ளையைப் போன்று நடத்துகிறார்)
பிக்யங்பீ பற்றிக் கூறும்போது பிகர்து: க்யங் ஸலோபங் சபீ (அஷ்டா:3.1.11) என்று பாணினி குறிப்பிடுகிறார். அதாவது பிநடந்து கொள்ளுதல்பீ என்ற பொருளில் பிக்யங்பீ என்ற ஒட்டு, உபமானமாக அமையும் கர்த்தாவைச் சுட்டும் வேற்றுமை சொல்லுக்குப் பின் வரும். அவ்வேற்றுமைச் சொல் பிஸபீவை ஈறாகக் கொண்டிருந்தால், அந்த பிஸபீ கெடும் என்பது பாணினி விதி.   
எ.கா.: 
ஸயேன இவ ஆசரதி காக:- கத்தரி உபமான (அஷ்டா:3.2.79)
(காகம் கழுகு போல் நடந்து கொள்கிறது)   
     கர்த்தாவைக் குறிக்கும் உவமைச் சொல்லை உப பதமாகக் கொண்ட தாதுவுக்குப் பின்பு பிணினிபீ ஒட்டு இணையும். உப பதமாக நிற்கும் கர்த்தா, ஒட்டின் (ணினி) கர்த்தாவுக்கு உவமையாக ஆகும் என்கிறார் மம்மட்டர்.   
எ.கா.:
 ....... உஷ்டர க்ரோஸீ
(ஒட்டகத்தைப் போல்(உஷ்டர) கத்துபவன்(க்ரோஸீ))
 இங்கு உவமைச் சொல் என்பது கர்மம், அது  கர்த்தாவிற்கு உவமையாக அமைவது பாணினியின் தாக்கம்.இவ்வாறு பாணினியின் அணியிலக்கண விதிகளை பின்பற்றுவதன் மூலம் காவிபிரகாசத்தில் அஷ்டாத்தியாயின்/பாணினியின் தாக்கம் செல்வாக்குப் பெறுகிறது. மம்மட்டரின் விளக்கப் பாடல்கள் பாணினியின் விதியை அடியொற்றி அமைந்துள்ளன.  

முடிவுரை     
சமஸ்கிருத மரபில் அலங்காரம் நாட்டியசாஸ்த்திரத்தில் தொடங்கி, பாணினியின் அஷ்டாத்தியாயில் வளர்ந்து காவியலங்காரம், காவியதர்சம், காவியப்பிரகாசம் ஆகிய நூல்கள் தோன்றிய காலகட்டத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தது. காவியப்பிரகாசம் பத்து இயல்கள் வழி இலக்கிய அலங்காரத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. தனக்கு முன் தோன்றிய அலங்கார நூல்களின் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி எழுந்த நூல் காவியப்பிரகாசம். காவியத்தில் (இலக்கியத்தில்) காவியக்குற்றம் வராமல்  இருக்கவேண்டும் என்பதே காவியப்பிரகாசத்தின் அடிப்படையான கொள்கை. சமஸ்கிருத அலங்கார நூல்களில் காவியக்குற்றம் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் கூறும் நூல் காவியப்பிரகாசம். உவமையணி விளக்கத்தில் பாணினிக்கும் காவியப்பிரகாசத்திற்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. பாணினி குறிப்பிடும் உவமை உருபுகளான இவ,தேன,வத்,இன முதலியவற்றை தன் நூலில் பயன்படுத்தும் மம்மட்டர், அவற்றோடு யதா,வா,வ,ஸம,ஸமான,ஸத்ருச முதலிய உவமை உருபுகளைப் புதிதாகக் கையாள்கிறார். பாணினி மேலே குறிப்பிட்ட உவம உருபுகளை இரண்டாம் வேற்றுமையில் பிஅதற்குத் தகுந்தபீ என்ற பொருளிலும், மூன்றாம் வேற்றுமையில் பிஅதனோடொக்கும் என்ற பொருளிலும், ஆறு,ஏழாம் வேற்றுமையில் பிஇனபீ என்ற பொருளிலும் கையாண்டுள்ளார். பாணினி கூறிய க்யங்,க்யஜ் போன்ற ஒட்டு வகைகளை, மம்மட்டர் உவமை வகைகளாகக் குறிப்பிடுகிறார். 

பயன்பட்ட நூற்கள் (ஆகூஸஙீகூச்கீசுஹசிகுட்)
மீனாட்சி.கு., 1994. பாணினி ஓர் அறிமுகம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 
___________,1998.பாணினியின் அஷ்டாத்தியாயி (தமிழாக்கம்) பகுதி.1,2,3  உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.

Gajendaragadkar, A.B. The Kavyapragasa of Mammatta. Bombay: Popular Prakashan, 1939.
Mammatacarya. The Kavyapirkasa of Mammata, With Commentry of Sridhara, (Vol.1). Samaskita Puataka Bhandara, 1979. 
Jha, Sri Ganganatha. Kavyapirakasha of Mammata. Varanasi: Bharatiya Vidya Prakasan, 1967.