முன்னுரை
இரு பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன் ஒப்புமை ஆகியவற்றின் மூலமே உவமை உருவாகிறது. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் உள்ள இவ்வகை ஒப்புமைகளை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். இதில் பலபொருள்களுக்கு இடையில் உள்ள ஒப்புமையையும் எடுத்துக்காட்டலாம். நம் பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அதிகமாகப் புழங்கும் இந்த அலங்காரக் கூறுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. சமஸ்கிருதக் காவியக் கோட்பாடுகளில் முதன்மையானதாக விளங்குவது அலங்காரக் கோட்பாடாகும். புலவன் தன் கற்பனை உணர்வை படைப்பில் வடிப்பதற்கும், தன் கருத்தை வெளிப்படுத்த கையாளும் உத்திகளுக்கும் உவமை அணியை பயன்படுத்துகிறான். எனவே அலங்காரக் கோட்பாட்டில் உவமை அணியே முதன்மையானதாக இருக்கிறது.
புஉவமையென்னும் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப்புனைந்து
காப்பிய அரங்கில் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவர் இதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமேபூ
(உவமை என்ற சிறந்த நாட்டியக்காரி பலவகை வேடங்களை அணிந்து இலக்கியம் என்னும் அரங்கில் தோன்றி பலவகை கலைகளால் நாட்டியங்கள் ஆடி புலவர் உள்ளத்தை மகிழ்விப்பாள்) என்கிறார் அப்பையா தீட்சிதர். உவமை என்பதை வீறுகொண்ட அணி என்றும் அவர் அழைக்கிறார். அலங்காரசாஸ்திரத்தின் உயிரே உவமை தான், பிற அலங்காரங்கள் அனைத்தும் உவமையிலிருந்து உருவெடுத்தவைகள் என்பர் பழைய இலக்கண ஆசிரியர்கள். தமிழின் மகாகவியான சுப்பிரமணிய பாரதியும் கூட இக்கருத்தை ஆமோதிக்கிறார்.
சமஸ்கிருதத்தின் மிகப்பழமையான வாய்மொழி இலக்கியங்கள் கூட உவமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்கிறார் பி.வி.கனே. வேதத்தில் பிஉவமைபீ என்னும் சொல் வருகிறது. ஆனால் அதற்கான வரையறை இல்லை. சமஸ்கிருத இலக்கியங்கள் உவமையை முதன்மையாகக் கொண்டு பாடுகின்றன. பிஉபமா காளிதாசஸ்யபீ என்று புகழப்படும் காளிதாசர் தன் உவமைகளால் பெருமையடைந்தார். அதனால் சமஸ்கிருத இலக்கணங்களும் உவமையணிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இலக்கிய அலங்காரத்தில் முதன்மையான கூறாக விளங்கும் உவமையணி பற்றிச் சமஸ்கிருத அலங்காரக் கோட்பாளர்கள் கூறும் கருத்துக்களைத் தொகுத்து, அவற்றை ஒப்பீடு செய்து சமஸ்கிருத அலங்காரக் கோட்பாளர்கள் உவமையணியை எவ்வாறு வளர்த்தெடுத்தனர் என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
யாஸ்கரின் உவமையணி விளக்கம்: சமஸ்கிருத இலக்கிய-இலக்கண மரபில் மிகப் பழமையானதாகத் திகழும் நிருக்தம், அஷ்டாத்தியாயி முதலிய நூல்களில் உவமை பற்றி விரிவான குறிப்பைக் காணமுடிகிறது. வேதத்தில் உள்ள பொருள் புரியாத கடினமான சொற்களுக்குப் பொருள் விளக்கம் தரும் நூலான நிருக்தா (ஆசிரியர்: யாஸ்கர், கி.மு.700) பெயர்ச்சொல், வினைச்சொல், உபசர்கம், நிபாதஸ் (ஒப்புமை) முதலியன பற்றிப் பேசும் போது, நிபாதஸ் என்னும் பகுதியில் உவமை பற்றிக் கூறுகிறது. அதில் உவமை என்பது பல பொருள் குறித்த ஒரு சொல் என்ற தன்மையில் உவமை அணியை விளக்குகின்றது. யாஸ்கர் உவமைச் சொற்களாக இவ, ந, சித், நு, தா, ஆ, வத் முதலியன உவமைச்சொற்களாக வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகளை ரிக் வேதத்திலிருந்து எடுத்தாள்கிறார் யாஸ்கர். மேலும், உவமைச் சொற்கள், உவமை உருமாறி வரும் சொற்கள், உவமை வகை என்னும் மூன்று தலைப்பில் உவமை பற்றி விளக்குகிறார்.
இவ, ந, சித், நு, தா, ஆ, வத் முதலியன உவமைச் சொற்கள் என்றும் பூத, ரூப முதலானவை உவமை உருமாறிய சொற்கள் என்றும் குறிப்பிடுகிறார். உவமைச் சொற்களில் ந, சித், நு ஆகியன பல பொருள் குறித்த ஒரு சொல்லாக வரும் என்கிறார் யாஸ்கர். பிநபீ என்ற உவமைச்சொல் பிஇல்லைபீ மற்றும் பிபோலபீ ஆகிய இரு பொருளிலும் வரும். அதனைக் பின்வரும் சான்றின் வழி விளக்குகிறார்.
நேந்த்ரம் தேவம மஸ்ஸத (ரிக்.10.85.1).
(இந்திரனைத் தேவனாக நினைக்கவில்லை)
இந்த இடத்தில் பிநபீ(நே) என்ற சொல் பிஇல்லைபீ என்ற பொருளில் வருகிறது. அதாவது பிநபீ என்னும் சொல் வாக்கியத்தின் முதலில் வந்தால் எதிர்மறையைக் குறிக்கும் என்னும் விதிப்படி. அதே சொல் வாக்கியத்தின் இடையில் வந்தால் உவமையைக் குறிக்கும் என்வரும் எடுத்துக்காட்டு வழி விவரிக்கிறார்.
துர்மதா ஸோ ந ஸீராயாம் (ரிக்.8.2.13).
(மதம் பிடித்தவர்கள் கள்ளுக்காகச் சண்டையிடுவது போல)
இங்கு பிநபீ என்பது வாக்கியத்தின் இடையில் வந்து பிபோலபீ என்று பொருள் தருகிறது. இந்த முறையிலேயே பிற உவமைச்சொற்களான சித், நு ஆகிய இரண்டும் வரும். பிசித்பீ என்ற சொல் பிபூஜைபீ மற்றும் பிபோலபீ ஆகிய இரு பொருளிலும் வரும் என்கிறார்.
ஆசார்யச்சித் இதம் பரூயாத் (ரிக்: 9.1.15)
(ஆசார்யனன்றோ இதைச்(பூஜை) செய்வான்)
ததி4சித்
(தயிர் போல்)
இங்கு பூஜை மற்றும் போல ஆகிய இரு பொருளில் வரும் உவமைச்சொல்லாக பிசித்பீ அமைந்துள்ளது. இதைப் போல பிநுபீ என்ற உவமைச் சொல் பிகாரணம்பீ, பிபோலபீ ஆகிய இரு பொருளில் வரும் என்கிறார். இதனை பின்வரும் எடுத்துக்காட்டு மூலம் அறியலாம்.
இதந்நு கரிஸ்யதி
(இது காரணமாகக் செய்வான்)
வ்ருக்ஷஸ்ய நு தே புருஹீதவயா: (ரிக்:6.24.3).
(ஓ! இந்திரனே உன்னுடைய பாதுகாப்பு மரத்தினுடைய கிளை போல் பரந்து நிற்கிறது)
ந, சித், நு முதலியன பல பொருளை குறிக்கும் ஒரு சொல்லாக இருந்தாலும், உவமை என்னும் பொருளையும் உணர்த்தி வருகின்றன. மேலும், இவ, தா, ஆ, வத் முதலியன உவமைச்சொற்களாக வருகின்றன. அதனை பின்வரும் சான்றுகள் வழி விளக்குகிறார்.
இவ மி அக்னிய: இவ, சந்திர:
(இவ மி அக்கினி போல், சந்திரன் போல்)
தா மி தம் ப்ரத்நதா2இமதா2 ..... (ரிக்.5.44.1)
(அவன் பழங்காலத்தைச் சேர்ந்தோர் போலும்/முன் காலத்தைச் சேர்ந்தவர் போலும்/ எல்லோரையும் போலும்....)
வத் - உவமைச் சொல்லைக் குறித்து வந்துள்ளது. பிராம்மணா இவ வ்ருஷலா இவ என்ற இடத்தில் வ்ருஷலன் மாடுபோல் இருக்கும் ஆனையோ பெண்ணையோ குறிக்கும்.
ஆ - ஜார ஆபகம் (ரிக்:10.11.6) (ஸௌபாக்யத்தை சூரியன் எடுப்பது போல்)
மேலே கூறப்பட்டவை அனைத்தையும் உவமைச் சொற்களாகக் குறிக்கிறார் யாஸ்கர். உவமை உருமாறி வரும் நிலையில் உவமைச்சொற்கள் எவ்வாறு அமையும் என்பதையும் விளக்குகிறார். வாக்கியத்தில் வரும் பிமேஷாபீ என்ற சொல்லை பிபூதபீ என்னும் உவமைச் சொல்லால் தான் குறிக்க வேண்டும் என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு வழி விவரிக்கிறார்.
மேக்ஷ பூதோ அபியந்நய: (ரிக்:8.2.40).
(மேக்ஷ போல் வேசம் போட்டுக்கொண்டு, நீ எங்களை நெருங்கினாய்)
இங்கு பிபூதபீ என்பது உவமைச் சொல்லாக உருமாறி வருகின்றது. அதேபோன்று பிஅக்னிபீ என்ற சொல் வந்தால், அங்கு பிரூபபீ என்ற உவமைச் சொல்லே வரும் என்கிறார் .
உவமை என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் போன்றோ அல்லது அதிலிருந்து வேறுபட்டோ இருக்கலாம் என்னும் கார்க்யரின் வரையறையை யாஸ்கரும் வழிமொழிகிறார். அதாவது உயர்ந்த குணமுள்ள பொருளுடன் தாழ்ந்த குணமுள்ளதையும், நன்கு அறியப்பட்ட பொருளோடு அறியப்படாததையும் ஒப்பிட்டுக் கூறலாம். ஒப்பிடும் பொருள் ஒப்பிடப்படும் பொருளோடு ஒன்றுபட்டும் இருக்கலாம், முரண்பட்டும் இருக்கலாம்.
தநூத்யஜேவ தங்கரா வநர்கூ ரசநாபி4: தசபி4: அப்யதீதாம் (ரிக்:10.4.6)
இதன் பொருள், உடம்பை விட்டாவது திருட நினைக்கும் இரண்டு காட்டுத் திருடர்கள் கயிற்றால் கட்டுவது போல் என்னுடைய இரு கைகளும் பத்து விரல்களால் கட்டப்பட்டுள்ளன. இங்கு உயர்ந்த குணங்களை விளக்கத் தாழ்ந்த திருடன் கட்டுவது உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு உவமைச்சொற்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் யாஸ்கர்.
யாஸ்கரின் உவமை வகைப்பாடு
யாஸ்கர் உவமையை ஐந்து வகையாகப் பகுக்கின்றார். அவை:
- கர்மோபமா (கூட்டு உவமை)
- பூதோபமா (உவமையிலிருந்து வருகின்ற உபமிதம்)
- ரூபோபமா (உவமையிலிருந்து மாறிவருகின்ற உபமிதம்)
- சித்தோபமா (நன்கு அறிந்த கவினால் பாடப்படுவது)
- லுப்தோபமா / அர்தோபமா (குறை உவமை)
1. கர்மோபமா (கூட்டு உவமை)
யதா2 வாதோ யதா2 வனம் யதா2 சமுத்ர ரஜதி (ரிக்: 5.78.8)
ஆடும்-சலிக்கும்-காற்றைப் போலும், வனத்தைப் போலும், கடலைப் போலும், பத்துமாதக் குழந்தை நஞ்சுக் கொடியுடன் சேர்ந்து அசைந்து இறங்குக.
2. பூ4தோபமா (உவமையிலிருந்து வருகின்ற உபமிதம்)
மேஷோ பூ4தோ ३ பி4யன்னயா: (ரிக்: 8.2.40)
வச்சிராயுதமேந்துபவனே! இங்ஙனம் உன்னைப் போற்றிய கண்வ மேதாதியிடம் நீ ஆட்டு வடிவத்துடன் அணுகிவந்தாய்.
3. ரூபோபமா (உவமையிலிருந்து மாறிவருகின்ற உபமிதம்)
ஹிரண்யரூப: ஸ ஹிரண்யசம்திரக் (ரிக்: 2.35.10)
இதன் பொருள், சலங்களின் பேரன்; பொன் வடிவமுள்ளவன்; பொன் புலங்களுள்ளவன்; பொன் நிறமுள்ளவன்; பொன்னான பீடத்திலிருந்து பிரகாசிக்கிறான்.
4. சித்4தோ3பமா (நன்கு அறிந்த கவினால் பாடப்படுவது)
அங்கிரஸ்வன் மஹிவ்ரத பிரஸ்கண்வஷ்ய ஸ்ருதி4 ஹவம் (ரிக்:1.45.3)
இதன் பொருள், அக்கினியே! மகத்தான விரதமுள்ளவனும் ஜாதவேதசனுமான நீ, பிரஸ் கண்வனுடைய அழைப்பைப் பிரியமேதனையும், அத்திரியையும், விரூபனையும், அங்கிரசனையும் செவியுறுவதுபோல் செவியுறவும்.
5. லுப்தோபமா (குறை உவமை) = அர்தோ2பமா
சிம்ஹ: (புஜயாம்), காக: (குத்ஸாயாம்)
பாணினியின் உவமையணி விளக்கம்
யாஸ்கர் போன்றே பாணினியும்(கி.மு.500) உவமை பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிடுகிறார். பாணினியின் உவமைப் பற்றிய விளக்கத்தைக் கீழ் வரும் சூத்திரம் விளக்குகிறது.
உபமானனி ஸாமான்ய வசன: (அஷ்ட:2.1.55)
இதன் விளக்கம், உபமானமாக அமையும் சொற்களுடன் மற்றொரு சொல் (உபமேயம்) பொதுவான இரண்டு சொற்களுக்கும் பொதுவான கூறுகளை உணர்த்தும் சொல் (ஸாமான்யவசன:) சேர்ந்து தத்புருஷமாகும். இதனைக் கீழ்வரும் சான்று மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
சான்று: ஸஸ்த்ரீ ஸ்யாமா தேவதத்தா மி இரும்பினால் ஆக்கப்பட்ட கத்தியைப்(ஸஸ்த்ரீ) போன்று கருப்பாக இருக்கும் வேதத்தா.
குமுதஸ்யேனீ மி குமுதத்தைப் போன்ற வெள்ளையான முகம்
இங்கு உபமானம், உபமேயம் ஆகிய இரண்டினை ஒப்பிடுவதனால் உண்டாகுகின்ற பொதுத் தன்மை குறிப்பிடப்பெற்றுள்ளது.
பாணினியின் உவமை வகைப்பாடு
பாணினி மூன்று வகையான உவமையைக் குறிபிடுகிறார். அவை:
- லுப்தோபமா (தொகை உவமை)
- பூர்ணா உபமா (விரி உவமை)
- வாதி லுப்தா (சொற்குறை உவமை)
1. லுப்தோபமா (தொகை உவமை): உபமானம், உபமேயம், பொதுத் தன்மை, உவமை உறுபு ஆகிய நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ குறைந்து வருவது தொகை உவமை ஆகும். அதனை பாணினி பின்வருமாறு விளக்குகிறார்:
உபமிதம் வியாக்4 ராதி3பி: ஸாமான்ய அபரயோகே3 (அஷ்டா:2.1.56)
உபமேயமாக அமையும் சொற்கள் வ்யாக்4ர: (புலி) முதலிய பெயர்ச் சொற்களுடன் இணைந்து, இரண்டுக்கும் பொதுவான குணத்தை மறைமுகமாக உணர்த்தாது வந்தால் அத்தொகை தத்புருஷமாகும் என்கிறார்.
சான்று: புருஷோ அயம் வ்யாக்4ர: இவ
மேற்கண்ட சான்றில் புருஷவ்யாக்4ர: (புலியைப் போன்ற மனிதன்) என்பது உபமானம்(வ்யாக்4ர:), உபமேயம்(புருஷ:), உவமை உருபு(இவ) ஆகிய இரண்டுக்கும் பொதுவான குணம் அதாவது பிஸூரத்வம்பீ குறிப்பிடவில்லை. அதனால் இங்குத் தொகையாகும்.
மேலும், இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பதங்களைக் கொண்டோ அமையும் ஒரு தொகை அதன் உறுப்புகள்(பதங்கள்) ஒவ்வொன்றும் உணர்த்தும் பொருளை விடுத்து அவைகளிலிருந்து வேறுபட்ட ஒரு பொருளை உணர்த்தினால் அத்தொகை பஹீவ்ரீஹி ஆகும். இதனைக் கீழ் வரும் சூத்திரம் மூலம் அறியலாம்.
அனேக அன்ய பதா3ர்தே (அஷ்டா:2.2.24)
தொகை என்பது மூன்று முக்கியப் பொருள்களைக் கொண்டு வரும். அதாவது உவமை, குணம், பொருள் ஒப்பீடு (ச்ஸங்க்ஷஞ் ஷச்ஙுசிஹசுக்க்ஷ) என்னும் மூன்றாலும் குறிப்பிட்ட பொருள் உணர்த்தப்பட வேண்டும் என்கிறார். மேலும் தொகையை இருபதத்தொகை என்றும் மும்பதத்தொகை என்றும் இரண்டாகப் பகுக்கிறார். இருபதத்தொகை என்பது உபமானமும், பொதுகுணமும் இணைந்து பொருள் உணர்த்துவதாகும். மும்பதத்தொகை என்பது உபமானம், பொது குணம், உபமேயம் ஆகிய மூன்றும் இணைந்து ஒரு பொருளை உணர்த்துவதாகும்.
2. பூர்ணா உபமா (விரி உவமை): பமானம், உபமேயம், பொதுத் தன்மை, உவமை உறுபு ஆகிய நான்கும் முழுமை பெற்று வருவது விரிஉவமை ஆகும். இதனைக் கீழ்வரும் சான்று மூலம் விளக்குகிறார்.
சான்று: புருஷோ அயம் வ்யாக்4ர: இவஸூர:
(புலியைப் போன்று வீரமுடைய மனிதன்)
மேற்கண்ட சான்றில், உபமானம்(வ்யாக்4ர:), உபமேயம்(புருஷ:), உவமை உருபு(இவ), பொதுத் தன்மை(ஸுர:) ஆகிய நான்கும் முழுமைபெற்று வருகின்றன.
3. வாதி லுப்தா (சொற்குறை உவமை): சொற்குறை உவமை பற்றிக் கூறும் போது பெயர் சொற்களில் வரக்கூடிய ஒட்டுகளை மூன்று வகைப்படுத்துகிறார் பாணினி. அவை பரஸ்மைபதி, ஆத்மானேபதி, உபயபதி என்பனவாகும். இதில் பரஸ்மைபதி மி க்யச் என்றும், ஆத்மானேபதி- க்யங் என்றும் அழைக்கிறார். இதனைப் பின்வரும் சூத்திரம் மூலம் அறியலாம்.
உபமானாதா3சாரே (அஷ்டா:3.1.10)
உபமானத்தைக் குறிக்கும் வேற்றுமை உறுபுகளால் முடியும் சொல்லுக்குப் பின் பிக்யச்பீ ஓர் உறுப்பாக இணையும். அது பிநடந்துகொள்பீ என்னும் பொருளில் அமையும். இவ்விதிக்கு பாணினி தரும் சான்று:
சான்று:புத்ரமிவ ஆசரதி சாத்ரம்- பிள்ளையைப் போன்று நடந்துகிறான் மாணவன்
புத்ரீயதி சா3த்ரம் மி மாணவனைப் பிள்ளையைப் போன்று நடத்துகிறான்
மேலும், பாணினி உவமையின் தன்மைகளாகக் குணம், செயல், சாதி (அஷ்டா:2.1.57) பற்றியும் பேசுகிறார்.
பாணினி கூறும் உவமைச் சொற்கள்
பாணினி உவமைச் சொற்களாக வத், வேதி, வதி, துல்யம், இவ, க்யங் முதலானவற்றைக் குறிப்பிடுகிறார். இவர் உவமைச் சொற்களை ஒட்டின் வகையிலும் வேற்றுமை அடிப்படையிலும் விளக்குகிறார். இங்கு உவமைச் சொல் ஒட்டு என்றே பயன்படுத்தப்படுகிறது.
தத்தித ஒட்டின் ஒரு வகையான பிவத்பீ ஒட்டுப் பற்றிப் பாணினி பின்வரும் சூத்திரத்தில் விளக்குகிறார்.
தேன துல்யம் க்ரியா சேத் வதி (அஷ்டா:5.1.115)
இதன் விளக்கம்: மூன்றாம் வேற்றுமை சொல்லுக்குப் பின் பிஅதனோடொக்கும்பீ என்ற பொருளில் வதி(வத்) ஒட்டு வரும். தருவிக்கப்பட்ட சொல் பிஒத்த செயல்பீ என்ற பொருளையுடையதாகும். கீழ் வரும் சான்று இதனை விளக்குகிறது.
ப்ராஹ்மண் வத் தீதே க்ஷப்ரிய: (பிராமணனைப் போன்று நடக்கிறான்)
தத்தித ஒட்டின் மற்றொரு வகையான பிவேதிபீ ஒட்டுப் பற்றிப் பாணினி கீழ்வருமாறு விளக்குகிறார்.
தத்ர தஸ்யேவ (அஷ்டா:5.1.116)
இதன் பொருள் ஆறாம், ஏழாம் வேற்றுமை சொல்லுக்குப் பின் பிவேதிபீ ஒட்டு போன்ற (இன) என்ற பொருளில் வரும் என்பதாகும். இதனைக் கீழ்வரும் சான்று மூலம் விளக்குகிறார்.
சான்று: மதுராவத் ஸ்ருக்4னே ப்ராகார: - மதுராவில் இருப்பதைப் போல் ஸ்ருக்கனத்திலும் காணப்படும் சுவர்கள்.
யக்ஞதத் தஸ்யேவ தே3வதத்தஸ்ய - யக்ஞத3த்தனுடைய பற்களைப் போன்ற, பற்களையுடைய தேவதத்தன்.
பாணினி பிவதிபீ என்ற ஒட்டு வகையைப் பற்றிக் கீழ்வரும் சூத்திரத்தில் விளக்குகிறார்.
ததர்ஹம் (அஷ்டா:5.1.117)
இதன் விளக்கம், இரண்டாம் வேற்றுமை சொல்லுக்குப் பின் பிவதிபீ ஒட்டு பிஅதற்குத் தகுந்தபீ என்ற பொருளில் வரும் என்கிறார். இதனைக் கீழ்வரும் எடுத்துக்காட்டின் மூலம் விளக்குகிறார்.
சான்று: ராஜவத் பாலனம் மி அரசனுக்குப் பொருந்திய பாதுகாப்பு. அதாவது அரசனால் பாதுகாப்பளிப்பதைப் போன்ற என்பதாகும்.
பிதுல்யம்பீ எனும் உவமைச் சொல்லைக் கீழ்வரும் சூத்திரம் மூலம் விளக்குகிறார்.
துல்யார்தை2: அதுலோமாப்4யாம் த்ருதீயா அன்யதரஸ்யாம் (அஷ்டா:2.3.72)
இதன் பொருள், துலா, உபமா என்ற சொற்களைத் தவிர்த்து மற்ற பிதுல்யபீ, பிஈடுபீ என்ற பொருளை உணர்த்தும் சொற்களோடு மூன்றாம் வேற்றுமை சொல் விருப்பாக வரும். அதாவது மூன்றாம் அல்லது ஆறாம் வேற்றுமையில் வரும் என்கிறார்.
சான்று: க்ருஷ்ணஸ்ய ந வித்3யதே மி கிருஷ்ணனுக்கு ஈடானவன் யாருமில்லை. இங்கு பிதுல்யபீ என்ற உவமை உறுபு ஈடான என்ற பொருளில் வந்துள்ளது.
பிக்யங்பீ ஒட்டுப் பற்றிக் கூறும்போது பிகர்து: க்யங் ஸலோபங் சபீ (அஷ்டா:3.1.11) என்று பாணினி குறிப்பிடுகிறார். அதாவது நடந்து கொள்ளுதல் என்ற பொருளில் பிக்யங்பீ என்ற ஒட்டு விருப்பாக உபமானமாக அமையும் கர்த்தாவைச் சுட்டும் வேற்றுமை சொல்லுக்குப் பின் வரும். அச்சொல் பிஸபீ வை ஈறாகக் கொண்டிருந்தால் பிஸபீ கெடும் என்பது பாணினி விதி. இதற்குக் கீழ் வரும் சான்றினைக் குறிப்பிடுகிறார்.
சான்று: ஸயேன இவ ஆசரதி காக: - காகம் கழுகு போன்று நடந்து கொள்கிறது
கர்த்தாவைக் குறிக்கும் உவமை சொல்லை உபபதமாகக் கொண்ட தாதுவுக்குப் பின் பிணினிபீ ஒட்டு இணைக்கப்படும். உபபதமாக நிற்கும் கர்த்தா ஒட்டின் (ணினி) கர்த்தாவுக்கு உவமையாகும்.
சான்று: உஷ்டர க்ரோஸீ மி ஒட்டகத்தைப் போல்(உஷ்டர) கத்துபவன்(க்ரோஸீ). இங்கு உவமைச் சொல் என்பது கர்மன். கர்த்தாவைக் குறிக்கவில்லை என்கிறார்.
சமஸ்கிருதத்தின் முதல் இலக்கணமாகத் திகழும் அஷ்டாத்தியாயி (பாணினி,கி.மு.5) தொகைகள், வேற்றுமைச் சொற்கள், சந்தி, தத்தித ஒட்டு என்ற முறையில் விளக்கும்போது தத்தித ஒட்டின் ஒரு வகையாக உவமையைக் குறிப்பிடுகிறார். நிருக்தாவும், அஷ்டாத்தியாயியும் இலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் கருவியாகிய உவமையை வெவ்வேறு இடத்தில் வைத்து வெவ்வேறு முறைகளில் விளக்குகின்றன.
பரதரின் உவமையணி விளக்கம்
காலத்தால் முற்பட்ட இலக்கிய விமர்சன நூலான பரதரின் நாட்டியசாஸ்திரத்தில் (கி.மு.200-கி.பி.200) இலக்கியப் படைப்புப் பற்றிப்பேசும் ஆறாவது மற்றும் ஏழாவது பிரிவுகள் இரசம், பாவம் பற்றிக் குறிப்பிடுகின்றன. ரசத்திற்கும், பாவத்திற்கும் நாட்டியசாஸ்திரம் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அவற்றிற்கான விரிவான விளக்கங்கள் வழி உணரலாம். எட்டு வகையான ரசம், எட்டு வகையான ஸாத்விக பாவம், முப்பத்தி மூன்று வகையான வியபிசாரி பாவம் என மிக விரிவாகவே பேசுகிறது. அவற்றோடு நான்கு வகை அணிகளான உவமை, உருவகம், தீபகம், யமகம் பற்றியும், பத்து வகையான குணங்கள், பத்து வகையான குற்றம் பற்றியும் குறிப்பிடுகிறது. நாட்டியசாஸ்திரம் குறிப்பிடும் உவமைக்கான வரையறை:
यत्किंचित् काव्यबंधेषु सादृश्येनोपमीयते।
उपमा नाम सा जेया गुणाकृतिसमाश्रया (நாட்டியசாஸ்திரம், ஞூஞீகூ.42)
ஒரு கவிதையை ஒப்பிடுவதற்கு அடிப்படையில் ஏதாவது ஒற்றுமை இருக்க வேண்டும். அப்படி அவற்றை ஒப்பிடும்போது அது குணம் மற்றும் வடிவத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். உபமானத்தையும் உபமேயத்தையும் நான்கு முறைகளில் ஒப்புமைப்படுத்தலாம். 1.ஒரு பொருளோடு ஒரு பொருள், 2.ஒரு பொருளோடு பல பொருள், 3.பல பொருளோடு பல பொருள், 4.பல பொருளோடு ஒரு பொருள்.
நாட்டியசாஸ்திரம் கூறும் உவமை வகைகள்
நாட்டியசாஸ்திரம் உவமையை ஐந்து வகையாகப் பகுக்கின்றது. அவை:
1. புகழ் உவமை(சிசுஹśஹṃசூā)
2. பழிப்பு உவமை(ஙூகூஙூக்ஷā)
3. தற்பெருமை உவமை(ஙிஹஙீசிகூஞ்ā)
4. தனித்தன்மை உவமை(சூஹக்ஷśṛī)
5. ஒப்புமை உவமை (ஙிகூṃஷகூஞ் சூஹக்ஷṛśī)
பாமகரின் உவமையணி விளக்கம்:
புபெண்ணிற்கு முகம் அழகானதாக இருந்தாலும் ஆபரணங்கள் இல்லையென்றால் முகம் சிறக்காததைப் போல உவமை முதலிய அலங்காரங்கள் இல்லையென்றால் கவிதை சிறக்காதுபூ என்கிறார் பாமகர்.
विरूध्देनोपमानेन देशकालक्रयादिभि:।
उपमेयस्य यत्साम्यं गुणलेशेन सोपमा॥ (காவியாலங்காரம், 2.30)
உபமானத்திலிருந்து உபமேயம் வேறுபட்டு இருக்குபோது இடம், காலம், செயல் முதலானவற்றில் சிறிய ஒற்றுமை இருப்பது உவமையணி. பாமகர் உவமை இருவகைப்படும் என்கிறார். அவை, விரி உவமை(பூர்ணோபமா), தொகை உவமை(லுப்தோபமா) என்பன.மேலும் சில வகையினைக் குறிப்பிடுகிறார். அவை:
1. மனோநிலை ஒற்றுமை உவமை
2. செயல் ஒற்றுமை உவமை
3. தொகை சொற்கள் உவமை
4. குறைபாடுடைய உவமை
5. பாலினம் அல்லது எண்கள் வேறுபட்ட உவமை
6. மாறுபட்ட உவமை
7. மிகுதியான உவமை
யதா, இவ, வத் என்ற உவமை சொற்களே இந்நூலில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. உபமானம், உபமேயம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த இவை பயன்படுகின்றது. இந்த சொற்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் கூட்டு சொற்களாகவும் வந்து ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றது.
பரதருக்கும், காளிதாசருக்கும் இடைப்பட்ட காலத்து இலக்கிய விமர்சன நூல்கள் கிடைக்காது போனாலும் அக்காலகட்டத்தில் தோன்றிய பாமஹரது காவ்யலங்காரமும், தண்டியின் காவ்யதர்சமும் முக்கியமான அலங்கார நூல்கள். பாமஹரும், தண்டியும் அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர். தண்டி முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட அலங்காரங்களைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின் வந்தவர்களான மம்மடர் அறுபத்தியொரு அலங்காரங்களையும், ருய்யகர் எழுபத்தைந்து அலங்காரங்களையும், அப்பையா தீக்ஷிதர் நூற்றுப்பத்தொன்பது அலங்காரங்களையும் கூறுகிறார்கள்.
தண்டியின் உவமையணி விளக்கம்:
அலங்காரங்கள் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசும் நூல் தண்டியின் காவ்யதர்சமாகும். காவியத்திற்கு அழகு தரும் அம்சங்கள் அனைத்தையும் அலங்காரம் என்றே குறிப்பிடுகிறார். ரசத்தையும் அலங்காரத்தில் சேர்த்து பிரசவத் அலங்காரம்பீ என்கிறார்.
यथाकथंचित् सादृश्यं यत्रोदूभूतं प्रतीयते
उपमा नाम सा तस्या: प्रपञ्योयं प्रदश्यति (காவியாதர்சம், 2.14)
இரண்டு பொருட்கள் இடையே ஒப்புமை வெளிப்படையாக இருப்பது உவமை என்பது காவியதர்சத்தின் விளக்கம். பொருளணியியலில் பகுதியில் உவமைக்கான புறநடையில் வழு(குற்றம்) பற்றி பின்வருமாறு கூறுகிறார். புஉவமைக்கும் பொருளுக்கும் இடையில் பால்வழு, ஒருமை-பன்மைவழு, அடைமொழி எண்ணிக்கையில் முரண்பாடு, மிகுதி, குறைவு ஆகியவை இருக்கக் கூடாது. ஆனால், மகாகவிகள் கூறினால் ஏற்றுக் கொள்கபூ . இத்தகைய குற்றங்களைப் பற்றி 52 முதல் 55 வரையான காரிகைகள் விரிவாகப் பேசுகின்றன. அவை:
பால் வழு: இவன் பெண் போல் இருக்கிறான்.
இவள் ஆண் போல் இருக்கிறாள்.
பெண் அம்சம் போலச் சந்திரன் இருக்கிறான்.
ஒருமை-பன்மை வழு: இவன்(ஒருமை) எனக்கு உயிர்(பன்மை)
மிகுதல்: இந்த அரசன் இந்திரன் போன்றவன்.
குறைதல்: அரசன் சூரியனின் தன்மையைப் பெற்றுள்ளான்.
யுத்த வீரன் நாய்போன்று இருக்கிறான்.
சூரியன் விட்டில்(பூச்சி) போன்று இருக்கிறான்.
எண்வழு: ஆகாயம் ஓடைகள் போல இருக்கின்றது.
தண்டி கூறும் உவமை வகைகள்
தண்டி முப்பத்து இரண்டு வகையான உவமைகளைக் கூறுகிறார்.
அவை: (1)விரி, (2)தொகை, (3)இதரவிதரம், ¬(4)சமூச்சயம், (5)உண்மை, (6)மறுபொருளுவமை, (7)புகழ், (8)நிந்தை, (9)நியம, (10)அதிசயம், (11)ஐயம், (12)தெரிதருதேற்ற, (13)இன்சொல், (14)விபரிதம், (15)இயம்புதல் வேட்கை. (16)பலபொருள், (17)விகாரம், (18)மோகம், (19)அற்புதம், (20)பலவயிற்போலி, (21)ஒருவயிற்போலி, (22)கூடா உவமை, (23)பொதுநீங்கு, (24)மாலை. இந்த இருபத்து நான்கு அணிகளும் தனித்து வரும். பின்வரும் எட்டு அணிகளும் பிற அணிகளோடு சேர்ந்து வரும்: (25)அற்புத உவமை, (26)சிலேடை, (27)அதிசயம், (28)விரோதம், (29)ஒப்புமைக்கூட்டம், (30)தற்குறிப்பேற்றம், (31)விலக்கு, (32)ஏது.
தண்டி கூறும் உவம உருபுகள்
காவியாதர்சத்தின் 57 முதல் 65 வரையான சூத்திரத்திரங்கள் உவமை உருபுகள்(சொற்கள்) பற்றிப் பேசுகின்றன. அதில் 72 உவம உருபுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை: இவ, வத், வா, யதா, ஸமான, நிப, ஸந்திப, துல்ய, ஸங்காச, நீகாச, ப்ரகாச, ப்ரதிரூபக, ப்ரதிபந்தப்ரதித்வந்தி, ப்ரத்யநீத, விரோதி, ஸத்ருக், ஸத்ருச, ஸம்வாதி, ஸஜாதீய, அனுவாதி, ப்ரதிபிம்ப, ப்ரதிசந்த, ஸரூப, ஸம, ஸம்மித, ஸலக்ஷண, ஸத்ரு, க்ஷாப, ஸபக்ஷ, உபபித, உபமா, கல்ப, தேசீய,தேச்யதி, ப்ரக்ய, ப்ரதிநிதி, ஸவர்ண, துவிதௌ, தௌயேசந்யூ, ஸமாஸஸ்ய, பஹீவ்ரிஹி, சேசாங்க, ஸபர்ததே, ஐயதி, த்வேஷ்டி, த்ருஷ்யதி, ப்ரதிகர்ஜதி, ஆக்ரோசதி, அவஜாநாதி, கதுர்த்தயாதி, நித்ததி, விடம்பயதி, ஸந்தத்தே, ஹஸதி, ஈர்ஸ்யதி, அஸ்யெதி, மூஷ்ணாதி, ஸௌபாக்கியம், தஸ்யகாந்தீபம், வீலும்பதி, தேநஸார்த்தம், அந்வேதி, அனுபந்நாதி, தச்சீலம், ஸூசகா.
அக்கினிபுராணத்தின் உவமையணி விளக்கம்:
ஒரு பொருளின் உபமானத்தையும் உபமேயத்தையும் ஒப்பீட்டு அதன் தனிதன்மையை வெளிப்படுத்துவது உவமை அணி ஆகும் என்கிறது அக்கினிபுராணம்.
उपमा नाम सा यस्यामुपमानोपमेययो:।
सत्ता चान्तरसामान्ययोगित्वेपी विवक्षितम्
किंचिदादाय सारूप्यं लोगयात्रा प्रवर्तते॥ (அக்கினிபுராணம்- 344.6)
உவமையணி என்றால் என்ன? என்பதை மேற்கண்டவாறு விளக்கும் அக்னிபுராணம் கூட்டுச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு அதை இரண்டு வகையாகப் பகுக்கிறது. அவை:
1. கூட்டுச் சொல்லின் மூலம் ஒரு பொருளை விளக்கும் உவமையணி
2. கூட்டுச் சொல் இன்றி ஒரு பொருளை விளக்கும் உவமையணி
மேலும் இவ்விரண்டும் தத்தம் பயன்பாட்டில் மூன்று வகைகளைக் கொண்டிருக்கின்றன. அதாவது கூட்டுச்சொல்லின் மூலம் பொருள் விளக்கும் உவமையணி பின்வரும் மூன்று நிலைகளில் அமையும்.
- உவமிக்கப்படும் பொருளோடு சொல் இணைந்து கூட்டுச் சொல்லில் வருதல்
- ஒப்புமைப்படுத்தப்படும் பொருளை சொல் வெளிப்படுத்தி நிற்றல்
- மேற்கண்ட இரண்டும் இணைந்தது வருதல்
அதேபோன்று கூட்டுச்சொல் இன்றி பொருளை விளக்கும் உவமையணியும் பின்வரும் மூன்று நிலைகளில் அமையும்.
- ஒப்புமைப்படுத்த வேண்டிய பொருளை ஒப்புமைப்படுத்தியும் பொருளோடு சொல் சேராது தனித்து வருதல்
- ஒப்புமை நிலையை சொல்லே புலப்படுத்துதல்
- மேற்கண்ட இரண்டும் கலந்து வருதல்
இவ்வகைப்பாட்டோடு மட்டும் நின்றுவிடாமல், மேலும் பதினெட்டு வகையான உவமையணியையும் குறிப்பிடுகிறது. அவை: பண்பு, வஸ்து, பரஸ்பர, விபரீத, நியாம, அநியாம, சமுச்சய, வேற்றுமை, பஹு, மாலா, விக்ரியா, அற்புதம், மோகம், சம்ஸய, நிச்சய, வாக்யார்தம், கமன, ரசனா முதலியனவாகும்.
உத்பட்டரின் உவமையணி விளக்கம்
உத்பட்டரின் காவியாலங்காரசாரசங்கிரகம் உவமை பற்றிப் பேசுகிறது. உபமேயத்திற்கும் உபமானத்திற்கும் இடையே இருக்கும் அழகான ஒற்றுமையைஇச் சொற்கள் மூலம் வெளிப்படுத்துவது உவமையணி என்கிறார் உத்பட்டர். இடம், காலம், ஜாதி, குணம், தொழில் முதலியவற்றால் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடும்.
यच्चेतोहारि साधर्म्यमुपमानोपमेययो:
मिथो वीभीन्नकालादि शब्दयोरूपमा तु तत् ॥ (காவியாலங்காரசாரசங்கிரகம் 1.15)
உத்பட்டரின் உவமையணி வகைப்பாடு: பதின்மூன்று வகையான உவம உருபுகளைக் குறிப்பிடுகிறார்உத்பட்டர். அவை பாணினியின் உவம உருபுகளை அடியொற்றி அமைந்துள்ளன. அவை: யதா, இவ, துல்லிய, ஸாத்ருச, வத், வேதி, ஸாம்ய, கியச், கியங், க்கிப், க்ருத், ணமுள், கன் முதலியன.
வாமனரின் உவமையணி விளக்கம்
வாமனரின் காவியாலங்கார சூத்திரவிருத்தி, புஉபமானத்திற்கும் உபமேயத்திற்கும் உள்ள குணங்களின் ஒற்றுமையே உவமைபூ என்கிறது. உபமனாம் என்பது உயர்ந்த குணங்களை உடைய பொருளைக் குறிக்கும், மற்றொரு பொருள் உபமேயம். உபமேயம் என்பது உபமானத்தின் பொருளோடு இயைந்து வரும் மற்றொரு பொருளைக் குறிக்கும். அது தாழ்ந்த குணங்களைக் கொண்டதாக இருக்கலாம். உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் உள்ள குண ஒற்றுமையே முதன்மையானது.
उपमानेनोपमेयस्य गुणलेशत: साम्यमुपमा:। (காவியாலங்கார சூத்திரவிருத்தி, 4.2.1)
வாமனரின் உவமை வகைப்பாடு: வாமனர் முதலில் இருவகை உவமை பற்றிப்பேசுகிறார். அவை:
- ளௌகிகீ உவமை
- கல்பித உவமை
இதில் ளௌகிகீ உவமை என்பது இரு பொருளுக்கிடையில் குணம் ஒன்றிவருவதாகும்.
எடு: முகம் கமலம் இவ மி கமலம் போன்ற முகம்
முகம் குமுதம் இவ - குமுதம் போன்ற முகம்
அதனைத் தொடர்ந்து, கல்பித உவமையை நான்கு வகையாகப் பகுத்துக் கூறுகிறார்.
1. நிலவை சுற்றியிருக்கும் வட்டம் போன்ற ஒரு கர்பிணி பெண்ணின் மார்பகத்தைக் களியாட்டத்தில் அவளின் காதலன் அழுத்தும் போது தாமரை மலரின் தண்டுகள் உறுதியானது போலவும் வானத்தில் ஒளிரும் வெண்மையான ஒளிக்கதிர்கள் போலவும் பிரகாசிக்கின்றது. இங்கு கர்ப்பிணி பெண்ணின் மார்பகம் (உபமானம்) நிலவின் வட்டம் (உபமேயம்) நிலவின் ஒளிக்கதிர் (உபமேயம்) தாமரையின் உறுதியான தண்டு (உபமானம்).
2. அவளுடைய கண்ணம் ஆரஞ்சு பழம் போன்று உள்ளது. இங்கு ஆரஞ்சு (உபமேயம்) கண்ணம் (உபமானம்)
3. அவளது காதோரத்தில் சூடிய ஷ்ருஸா மலர் புதிதாக பறித்த கூஸா புல் போன்று உள்ளது. இங்கு ஷ்ருஸா மலர் (உபமேயம்) புதிதாக பறித்த கூஸா புல் (உபமானம்)
4. ஆலமரத்தின் கிளைகளிருந்து பழைய இலைகள் உதிர்ந்துக் கொண்டிருக்கையில் கிளியின் அலகு போன்ற சிவந்த இளம் இலைகள் தளித்துக் கொண்டிருந்தன. இங்கு ஆலமரத்தின் சிவப்பு நிற இலைகள் (உபமேயம்) கிளியின் அலகு (உபமானம்).
மேலும்,வாமனர் பதஅர்த்த உவமை, வாக்கியார்த்த உவமை என்றும் பூர்ணா(முழுமையானது), லுப்தா(குறைபாடுடையது). பூர்ணா உபமா என்பது உபமானம், உபமேயம், பொதுகுணம், உவம உருபு என்ற நான்கு உறுப்புகளைப் பெற்றுவருவது. மேலே கூறப்பெற்ற நான்கு உறுப்புகளுள் ஒன்றோ இரண்டோ மூன்றோ குறைந்து வருவதற்கு லுப்தா உபமா என்று பொருள்.
பூர்ணோபாமா
சான்று: தாமரை போன்ற அழகான முகம். இங்கு தாமரை என்பது(உபமானம்), முகம் (உபமேயம்), அழகான(பொது குணம்),இவ (உவம உருபு).
லுப்தா உபமா
சான்று: பொதுகுணம் இல்லாமல் வருவது மி அரசன் நிலவு போன்று இருக்கின்றான்.
உவம உருபு இல்லாமல் வருவது மி அவள் பச்சை நிறமாக இருக்கிறாள்
பொதுகுணம், உவம உருபு இல்லாமல் வருவது - அவள் சந்திரன் முகம்
வாமனர் உவமையில் வரும் குற்றங்களாக ஆறு வகையினைக் குறிப்பிடுகின்றார். அவை: குறைபாடு,மிகுதியான குணம், பாலின வேறுபாடு, எண் வேறுபாடு, ஒற்றுமை இல்லாதது, சாத்தியமற்றது என்பன. உபமானத்தையும் உபமேயத்தையும் தாழ்வான குறைபாடுகளால் குறிப்பிடப்பெறுவது உவமை குறைபாடு வகையைச் சாறும். இது சாதி,அளவு,குணம் முதலானவற்றில் வரும்.
சாதி குறைபாடு: சான்று: உங்களுக்கென்றே இந்த சாகசங்களைப் போலவே தைரியமாக நடந்து கொண்டேன்.
அளவு குறைபாடு: சான்று: சூரியன் தீப்பொறியைப் போல் பிரகாசிக்கிறது.
குண குறைபாடு: சான்று: மானின் தோலை அணிந்திருந்த முனிவரின் கையில் உள்ள பாத்திரம் அடர்ந்த நீல மேகங்களால் சூழப்பட்ட சூரியன் போல் பிரகாசிக்கிறது.
மிகுதியான குணம் மூன்று வகைப்படும். அவை, சாதி மிகுதி,அளவு மிகுதி, குணம் மிகுதி என்பன.
சாதி மிகுதி: சான்று: தொழிலாளர்கள் வலிமைமிக்க ருத்ராக்களைப் போல் நுழையட்டும்.
அளவு மிகுதி: சான்று: உங்களுடைய கடற்படை ஆழமான உலகத்தைப் போன்றது. உங்களுடைய மிகப் பெரிய மார்பகங்கள் மலை போன்றது. உங்களின் பின்னப்பட்ட கூந்தல் யமுனா ஆற்றின் வீழ்ச்சிப் போன்றது.
மம்மடரின் உவமையணி விளக்கம்
மம்மடரின் காவியாபிரகாசம், இரண்டு பொருள்களுக்கு இடையில் உள்ள ஒப்புமையை வேறுபடுத்திக் காட்டுவது உவமையணியாகும் என்கிறார்.
साधर्म्यमुपमा भेदे । (காவியாபிரகாசம், 10.1)
மம்மடர் வாமனர் போல உவமையை இரு வகைப்படுத்துகிறார். அவை: நிறை உவமை (பூர்ணா), குறை உவமை (லுப்தா).
நிறை உவமை: நிறை உவமை என்பது உபமானம், உபமேயம், பொதுவான குணம், உவம உருபு, ஆகிய நான்கையும் பெற்று முழுமையானதாக வரும். மேலும் அது இரண்டு வகையில் அமையும். ஒன்று, நேரடியாக/வெளிப்படையாக பொருளை உணர்த்துதல், மற்றொன்று, மறைமுகமாக பொருளை உணர்த்துதல் ஆகும். இவை இரண்டும் மூன்று வடிவங்களில் அமையும். அவை: நேரடியாக வரும் வாக்கியம், நேரடியாக வரும் தொகை, நேரடியாக வரும் ஒட்டு என்னும் வடிவங்களில் வரும். இதே போன்று மறைமுகமாக வரும் பொருளும் இம்மூன்று (மறைமுகமாக வரும் வாக்கியம்/தொகை/ஒட்டு) வடிவங்களில் அமையும்.
குறை உவமை: குறை உவமை என்பது உபமானம், உபமேயம், பொதுவான குணம், உவம உருபு என்னும் நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ குறைந்து வருவது ஆகும். இது தர்மலுப்த, உபமான லுப்தா, வாதி லுப்தா, தர்மவாதி லுப்தா, தர்மோபமான லுப்தா, வாத்துபமேய லுப்தா, வாதிதர்மோப லுப்தா என ஏழு வகைப்படும். இவற்றைப் பின்வரும் வரைபடம் விளக்குகின்றது.
1. குணக்குறை உவமை (5): வாக்கியத்தில் வரக்கூடிய நேரடிப்பொருள், வாக்கியத்தில் வரக்கூடிய மறைமுகப்பொருள், தொகைச்சொல்லில் வரக்கூடிய நேரடிப்பொருள்,
தொகைச்சொல்லில் வரக்கூடிய மறைமுகப்பொருள்.
மற்றும் ஒட்டில் வரக்கூடிய மறைமுகப் பொருள் என்பனவாகும்.
2. உபமான குறை உவமை (2): வாக்கியத்தில் வரக்கூடிய மறைமுகப் பொருள்,
தொகைச் சொல்லில் வரக்கூடிய மறைமுகப் பொருள்.
3. சொல் குறை உவமை (6): தொகை, கர்மக்யஜ்கா, ஆதாரக்யஜ்கா, க்யங்கா,
கர்மணமுல்கா, கர்த்ருணமுல்கா.
4. குணச் சொல் குறை உவமை (2): க்விப்கா, தொகை
5. குணம் உபமான குறை உவமை (2): வாக்கியத்தில் வரக்கூடிய மறைமுகப் பொருள்,
தொகைச் சொல்லில் வரக்கூடிய மறைமுகப் பொருள்.
6. சொல் உபமேய குறை உவமை (1): க்யஜ்கா
7. சொல் குண உபமான குறை உவமை (1): ஸமஸகா
காவியப்பிரகாச உவமை அணி வகைப்பாடுகள் பெரும்பாலும் பாணினியின் அஷ்டாத்தியாயியை அடிப்படையாகக் கொண்டுள்ளன. குறிப்பாக உவமை அணியில் உள்ள எடுத்துக்காட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாணினியின் உவமை விதிகளைப் பின்பற்றி அமைந்துள்ளன. தத்தித ஒட்டின் வகைகள், தொகை உவமை, விரி உவமை, இவ, துல்யம் ஆகிய உவம உருபுகள், பரஸ்மைபதி, ஆத்மானேபதி முதலியவற்றில் மம்மட்டர் பாணினியை பின்பற்றுகிறார்.
காவியாபிரகாச உவம உருபு
காவியாபிரகாசம் உவம உருபு பற்றிக் கூறுகையில் உபமானம், உபமேயம், பொது குணம், உவம உருபு ஆகிய நான்கினை முழுமையாகப் பெற்று உவம உருபுகளை வெளிப்படையாக உணர்த்துவதை பியதாதிபீ என்றும் மேலே கூறப்பட்ட நான்கினுள் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டதோ குறைந்து வந்து உவம உருபுகளை மறைமுகமாகக் கூறுவததை பிதுல்யாதிபீ என்றும் பகுக்கிறார். பியதாதிபீ உவம உருபுகளாக யதா, இவ, வா, வ ஆகிய நான்கும், பிதுல்யாதிபீ உவம உருபுகளாகத் துல்ய, ஸத்ருச, சம, ஸமான ஆகிய நான்கும் காரிகையில் வரும் என்கிறார்.
ருய்யகர்
ருய்யகரின் அலங்காரசர்வஸ்வம் புஉபமானத்திற்கும் உபமேயத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை ஆகியவற்றை அறிந்து அவற்றின் பொதுப்பண்பை வெளிப்படுத்துவது உவமையணி ஆகும் என்கிறது.
उपमानोपमेययो: साधर्म्यो भेदाभेदतुल्यत्वे उपमा। (அலங்காரசர்வஸ்வம், சி.25)
ருய்யகர் உவமையணியை இரு வகையாகக் பகுத்துக் கூறுகிறார். ஒரு சொல் பொதுக்குணத்தை வெளிப்படுத்தும் போது, உபமேயத்திற்கும் உபமானத்திற்கும் ஒரு தொடர்பையும் உண்டாக்கும். சில நேரங்களில், ஒரு சொல் பொதுக்குணத்தை வெளிப்படுத்தும் போது உபமானமும் உபமேயமும் ஒன்றுபட்டுக் கூறும் பொருளை வேறுபடுத்துத்திக் காட்டும். இந்த வேறுபடுத்துதல் இரண்டு வழிகளில் நிகழும். ஒன்று, உபமானம், உபமேயங்களாக இருக்கும் இரு வாக்கியங்கள் ஒரே குணத்தை வெவ்வேறு சொற்களில் தனித்தனியாகக் கூறும்போது. அதனை பிபிரதிவஸ்துபமா அணிபீ என்பர். மற்றொன்று, உபமானம், உபமேயம், பொதுக்குணம் இவற்றிற்குள் உள்ள உறவை வெளிப்படுத்தும்போது. அதனை பிவஸ்துபிரதிவஸ்துபமா அணிபீ என்பர்.
விஸ்வநாதரின் உவமையணி விளக்கம்
விஸ்வநாதரின் சாகித்யதர்பணம் புஒரு வாக்கியத்தில் இரண்டு பொருள்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை வெளிப்படுத்துவது உவமையணி ஆகும்பூ என்கிறது.
साम्यं वाच्यमवैधर्म्यवाक्यक्यै उपमा दुयो:। (சாகித்யதர்பணம்,10.14)
இவர் பொதுக்குணத்தை ஒவ்வொரு சொற்களிலும் பயன்படுத்திக் கூறுகிறார். உவமை, உருவகம் இவற்றை வேறுபடுத்திக் கூற, சமமான பொருளைக் குறிக்கும் இலக்கண சொல்லான பிவாச்சியபீ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
முகம் சந்தர: முகமே சந்திரன்
முகம் இவ சந்தர: சந்திரன் போன்ற முகம்
இதனைத் தொடர்ந்து இருவகை உவமைகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை: நிறை உவமை (பூர்ணா), குறை உவமை (லூப்தா). அதன் அவற்றின் இரு பிரிவுகளைக் குறிப்பிடுகிறார். அவை: நேரடியானது (ச்ரௌதி), மறைமுகமானது (ஆர்தி). இவ்வகைப்பாடுகள் மம்மட்டரின் உவமை வகைப்பாட்டை ஒத்திருக்கின்றன. உவம உருபுகளில் நேரடியான உவம உருபுகளாக யதா, இவ, வா,வத் ஆகிய நான்கையும், மறைமுகமான உவம உருபுகளாக துல்ய,சமமான, ஸாம்ய, ஸாத்ருஷ்ய ஆகிய நான்கையும் குறிப்பிடுகிறார்.
ஜகன்னாத பண்டிதரின் உவமையணி விளக்கம்
ஜகன்னாத பண்டிதரின் இரசகங்காதரம் புஒரு பொருளை மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவது உவமையாகும்பூ என்று குறிப்பிடுகிறது.
सादृस्यं सुन्दरं वाक्यार्थोपसकारकमुपामालंकृति: ॥ (இரசகங்காதரம், ப.157)
முடிவுரை
சமஸ்கிருதத்தில் பாணினி, பாமகர், தண்டி, மம்மடர், ருய்யகர், வித்யாநாதர், அப்பையா தீட்சிதர் முதலியோர் முதன்மையான அலங்காரக் கோட்பாட்டாளர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களில் அலங்காரக் கோட்பாட்டை தனிப்பெருங்கோட்பாடாக வளர்த்தெடுத்த முன்னோடி பாமகர். சமஸ்கிருத அலங்காரக் கோட்பாட்டாளர்கள் உவமைக்குக் கூறும் வரையறைகளில் சில ஒன்றுபட்டும், சில வேறுபட்டும் காணப்படுகின்றன. இரண்டு பொருள்களுக்குள் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துவதே உவமை என்னும் பொது வரையறையோடு சில சிறப்புக்கூறுகளையும் பல அலங்கார ஆசியர்கள் இணைத்துக் கூறுகின்றனர். பொருளை மட்டும் ஒப்பிடாமல் அதன் குணத்தோடும், வடிவத்தோடும் ஒப்பிடுதல், ஒரு பொருளோடு ஒரு பொருளையோ, பல பொருளையோ ஒப்பிடுதல், பல பொருளோடு ஒரு பொருளையோ, பல பொருளையோ ஒப்பிடுதல், இடம், காலம்,தொழில் ஆகியவற்றோடும் ஒப்பிடுதல் என பல்வேறு முறைகளை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு உவமை அமையலாம் என்கின்றனர் சமஸ்கிருத அலங்கார ஆசிரியர்கள்.
பிஒப்புமைபீ என்னும் பொருள் கொண்ட உவமையைச் சுட்டக் கையாளும் கலைச்சொற்களில் அலங்கார ஆசிரியர்களுக்குள் சில வேறுபாட்டைக் காணமுடிகிறது. உவமையைக் குறிக்க பாணினியும் உத்பட்டரும் பிசாதர்ம்யபீ என்னும் சொல்லைக் கையாள்கின்றனர். பரதர், தண்டி, மம்மட்டர், ஜகன்னாதர் ஆகிய நால்வரும் பிசாத்ருஷ்யபீ என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.பாமகர், வாமனர், ருய்யகர், விஸ்வநாதர், ஹேமசந்திரர் ஆகிய ஐவரும் பிஸாம்யபீ என்னும் சொல்லைக் கையாள்கின்றனர். ருத்ரடர் மட்டும் பிசமானபீ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
சமஸ்கிருத அலங்கார மரபில் உவமை பற்றி யாஸ்கர் தான் முதன்முதலில் பேசுகிறார். ஆனால் அவர் உவமையின் வரையறையை தெளிவாகக் கூறாமல் கார்க்கையரின் கூற்றை மேற்கோள்காட்டிச் செல்கிறார். புஅதைப்போன்றதும், அதைக்காட்டிலும் வேறுபட்டதுமான பொருள்பூ என்னும் அந்த வரையறை உவமை இதுவென்று தெளிவாகக் கூறவில்லை. பாணினி தான் முதன்முதலில் உவமையை தெளிவாக வரையறுக்கிறார். புஉபமானம் உபமேயம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான கூறுகளை உணர்த்தும் சொல்பூ என்னும் பாணினியின் விளக்கமே முழுமுதல் விளக்கமாக அமைந்துள்ளது.
உவம உருபுகளை இலக்கண விதிப்படி விளக்குவதிலும் யாஸ்கரை விட பாணினி சிறந்து விளங்குகிறார். யாஸ்கர் குறிப்பிடும் உவம உருபுகளான இவ, ந, சித், நு, தா, ஆ, வத் ஆகிய ஏழையும் சொற்பொருள் அடிப்படையில் உவம உருபுகளாகக் குறிக்கிறார்.எனவே தான் ந, சித், நு முதலிய மூன்றும் பலபொருள் குறித்த ஒரு சொல்லாக வருகின்றன. ஒரு விதியின் குணம் அல்லது தன்மையை மற்றொன்றிலும் செயற்படுமாறு அமையும் விதிகளை பிஅதிதே3ஸ்பீ விதிகள் என்கிறார் பாணினி. பிவதிபீ என்ற தத்திதவொட்டைப் பயன்படுத்தி பாணினி இவ்விதிகளை அமைக்கிறார். அதாவது, பிவத்பீ என்ற சொல் பிபோல்பீ என்ற பொருளை உணர்த்துகிறது. இதே சொல்(வத்) வேற்றுமை சொற்களோடு ஒப்புமைப்படுத்தும் போது மூன்றாம் வேற்றுமை சொல்லுக்குப் பின் பிஅதனோடொக்கும்பீ என்ற பொருளிலும், பிஒத்த செயல்பீ என்ற பொருளிலும் வருகிறது. பாணினி பிவேதிபீ ஒட்டுப் பற்றிக் குறிப்பிடும்போது ஆறாம் வேற்றுமை சொல்லுக்குப் பின் பிஇனபீ என்ற பொருளில் வரும் என்கிறார். இதுபோன்றே பிவதிபீ என்ற ஒட்டு இரண்டாம் வேற்றுமை சொல்லுக்குப் பின் பிஅதற்குத் தகுந்தபீ என்ற பொருளில் வந்துள்ளது. இவ்வாறு பாணினி உவமை உருபை விளக்கும் முறை இலக்கணத் தன்மை உடையதாக இருக்கிறது.
உவமையை வகைப்படுத்தும் முறையிலும் இருவரும் வேறுபடுகிறார்கள். யாஸ்கர் உவமை வகைகளாகக் கர்மோ உபமா, பூதோபமா, ரூபோபமா, சித்தோபமா, லுப்தோபமா என்று குறிப்பிடுகிறார். பாணினி தொகை உவமை, விரி உவமை, சொற் குறை உவமை என்று கூறுகிறார்.இவர்களுக்கு பின்னால் வந்த பரதர் உவமையை ஐந்து வகை என்றும் அக்கினிபுராணம் இரண்டு என்றும், பாமகர் ஏழு என்றும், தண்டி முப்பத்தி இரண்டு என்றும், உத்பட்டர் பதினான்கு என்றும் பலவாறாக வகைப்படுகின்றனர். இதனை உவமையின் வகைப்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையாகவே கருத வேண்டும்.
பயன்பட்ட நூற்கள் (ஆகூஸஙீகூச்கீசுஹசிகுட்)
அறவேந்தன் இரா., 2004. தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும், சபாநாயகம் பப்ளிகேஷன்ஸ், சிதம்பரம்.
இராமானுஜ தாதாசாரியார், 1973. யாஸ்க நிருக்தம் - தொகுதி 1,2 (தமிழ் ஒலிபெயர்ப்பும் மொழிபெயர்ப்பும் உடையது), தஞ்சை சரஸ்வதி மஹால், தஞ்சாவூர்.
கோவிந்தன்.த., 2002. காளிதாசன் உவமைகள், அநுராகம் பதிப்பகம், சென்னை.
___________. 2002. காளிதாசரின் உலகமகா காவியங்கள், அநுராகம், சென்னை.
மீனாட்சி.கு.,1994. பாணினி ஓர் அறிமுகம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
_________.1998. பாணினியின் அஷ்டாத்தியாயி (தமிழாக்கம்) பகுதி.1,2,3,உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
Delvalkar. SK, and B Rangacharya. Dandi’s Kavyadarsa. Bombay: The Department of Public Instruction, 1920.
Sarup, Laxshman. The Nighantu and the Nirukta. Delhi: Motilal Banarsidass Published, 2009.
Kane, P.V. History of Sanskrit Poetics. Banaras: Motilal Banarasidas, 1971.
Patka, M.M. History of Sanskrit Lexicography. New Delhi: Munshiram Manoharlal Publication, 1981.
Gajendaragadkar. A.B. The Kavyapragasa of Mammatta. Bombay: Popular Prakashan, 1939.
Mammatacarya. The Kavyapirkasa of Mammata, With Commentry of Sridhara (Vol.1). Samaskita Puataka Bhandara, 1979.
Jha, Sri Ganganatha. Kavyapirakasha of Mammata. Varanasi: Bharatiya Vidya Prakasan, 1979.
Meenakshi. K. Literary Criticism in Thamil and Sanskirit. Chennai: International Institute of Thamil studies, 1999.