சாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் 2019

விண்ணப்பங்களுக்கான அழைப்பு

2019, ஜூலை 10 ம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைகிறது.

நீங்கள் ஒரு ஆர்வலரா?மாணவரா?அல்லது ஆராய்ச்சி மாணவரா? நமது வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கண்டறியவும், அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடவும் தயாராக இருக்கிறீர்களா? இந்தியாவின் அறிவு அமைப்புகள் மீதான உங்கள் ஆர்வத்தினைப் பின்தொடர இதோ ஒரு வாய்ப்பு. இப்பொழுதே விண்ணப்பிக்கவும்.

 

ஃபெல்லோஷிப் பற்றி

நமது வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கண்டறியவும், அதனுடன் இணைந்து செயல்படவும், மற்றும் இந்தியாவின் அறிவு அமைப்புகள் மீதான ஆர்வத்தினைப் பின்தொடரவும் விரும்பும் ஆர்வலர், மாணவர் மற்றும் ஆராய்ச்ச்சி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதற்காக, சாஹாபீடியா அதன் ஃபெல்லோஷிப் திட்டத்தின் மூன்றாவது பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

 

புலனாகா கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் 2003 மாநாடு (இதன்பின் யுனெஸ்கோ 2003 மாநாடு என குறிக்கப்படுகிறது), “புலனாகா கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை கலாச்சார பன்முகத்தன்மையின் முதன்மை ஊற்றாகவும நிலையான வளர்ச்சியின் உத்திரவாதமாகவும்”குறிப்பிடுகிறது. சாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப்கள்  - உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் – புலனாகா பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும் பாரம்பர்யத்தைப் பாதுகாக்கும் சமூகங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களை எளிதாக அணுகவும் அதிக வழிவகுக்கிறது. சாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப்கள் 2019 , இந்திய அரசின் கலாச்சார அமைச்சத்தால் ஆதரிக்கப்படுகிறது. 

 

இந்த முன்முயற்சிகளின் மூலம், ஆராய்ச்சி மாணவர்கள், பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் பற்றிய அறிதலை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தவும், ஆவணப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுவார்கள், அத்துடன் அவர்களின் படைப்பிற்கு பங்களிக்கும் விரிவான நெட்வொர்க்குடன் கலந்துரையாடவும் ஊக்குவிக்கப்படுவார்கள். ஆராய்ச்சி மாணவர்களால் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல்  சாஹாபீடியா இணையதளத்தில் வெளியிடப்படும்.

 

மொழிகள்

இந்த ஆண்டில் பின்வரும் மொழிகளில் ஃபெல்லோஷிப் வழங்கப்பட உள்ளது – ஆங்கிலம், இந்தி,  வங்காளம்,  தமிழ் மற்றும் மலையாளம்.

 

தகுதி

ஃபெல்லோஷிப்கள் , மானுடவியல் மற்றும் சமூக அறிவியலில் பொதுவாக பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கு மேல் தகுதி கொண்ட அல்லது அதற்கு இணையான அனுபவம் கொண்டவர்களுக்கானது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் பாடத்துடன் தொழில் சார்ந்த அல்லது துறை சார்ந்த அறிமுகம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம். இந்திய அரசு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஃபெல்லோஷிப்கள் கிடைக்கும். ஏற்கெனவே சாஹாபீடியா யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் கிடைக்கப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

 

கால அளவு

ஃபெல்லோஷிப்கள், 01 செப்டம்பர் 2019ல் இருந்து 15 மார்ச் 2020ம்  வருடத்திற்கு இடையேயான இருபத்து எட்டு(28) வார கால அளவிற்குள் முடிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஃபெல்லோஷிப் ஆய்வுப்பணிகளை சமர்ப்பிக்கத் தவறினால் ஃபெல்லோஷிப் ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் பின்னிணைப்பு 3 ல் காட்டப்பட்டுள்ள கால அளவினையும், பின்னிணைப்பு ஐந்தில் கூறப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளையும் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

வகைகள்

ஃபெல்லோஷிப்கள் ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், அல்லது இந்த இரண்டு வகைகளின் கலவைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகைகளைப் பொறுத்து, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தாங்கள் சமர்ப்பிக்க விரும்பும் ஆராய்ச்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பாதாரர்கள் பின்னிணைப்பு 4ல் உள்ள சாஹாபீடியா உள்ளடக்க உருவாக்கத்திற்கான வழிகாட்டுதல்களையும்,பின்னிணைப்பு ஐந்தில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளையும் பார்க்கலாம்.

 

சமர்ப்பித்தல்

ஒவ்வொரு ஃபெல்லோஷிப்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மூன்று வகைத் தெரிவுகளை கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும்போது, மூன்று வகையாக சமர்ப்பிக்கும் வழிகளை அடையாளம் காணலாம். சமர்ப்பிப்பதற்கான மூன்று வகை தெரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பு ஒன்று முதல் நான்கு வரை பார்க்கவும்.

முதல் சமர்ப்பிப்புக்கான தெரிவுகள் :ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும் (1)
விளக்கப் படங்கள்/ அறிமுகக் கட்டுரை (3000
சொற்களுக்குள் 5 முதல் 10 படங்கள்
 கொண்டதாக இருக்க வேண்டும்), அல்லது
குறு ஆவணப் படம் (ஆங்கில துணைத்தலைப்புடன் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக்கூடியதாகவும் 500 வார்த்தைகள் கொண்ட கதைச் சுருக்கத்துடனும் இருக்க வேண்டும்).

இரண்டாவது மற்றும் மூன்றாவது சமர்ப்பித்தலுக்கான தெரிவுகள்: ஏதேனும் இரண்டைத் தேர்வு செய்யவும்.
இணைப்பு கட்டுரை (1500 சொற்களுக்கு மிகாமல்
 3-5 படங்களுடன் இருக்க வேண்டும்), அல்லது
படத் தொகுப்பு (தலைப்புடன் கூடிய 30-50 படங்கள் ), அல்லது புகைப்படக் கட்டுரை (20 படங்களும் அத்துடன் அவற்றை 500 முதல் 800 வார்த்தைகளுக்குள் விவரிக்க வேண்டும்).

வல்லுநர்/ஆராய்ச்சியாளர்/பிராக்டீஸ் செய்பவர்கள் ஆகியோரின் பேட்டிக் கட்டுரை  ( குறைந்தபட்சம் 10 கேள்வி பதில்களுடனும், 1500 சொற்களுடனும் இருக்க வேண்டும்)

கூடுதலாக, உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களின் கூற்றுக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

 

நிதி உதவி

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ 44,445/  விருதுத் தொகை வழங்கப்படும்.  1961ம் ஆண்டு வருமான வரி விதிப்பு சட்டப்படி, வரிகள் பிடித்தம் செய்யப்படும். ஆகவே, விருதுத் தொகை 40,000 ரூபாயாக இருக்கும்.
அது மூன்று தவணைகளில், குறிப்பிட்ட சமர்ப்பித்தலை முடிப்பதைப் பொறுத்து அளிக்கப்படும்.

 

உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூடுதலாக ரூ 10,000 மொழிபெயர்ப்புக்காக பெறுவார்கள்.

 

விண்ணப்ப வழிகாட்டுதல்கள்

விண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்கண்ட அனைத்தையும் சமர்ப்பிக்கவும் :

1. ரெசியூம்  (சுய குறிப்புகள்)

2. 250 சொற்களில் ஒரு சுருக்கமான திட்டக் கட்டுரையும்,1000 சொற்களுக்கு மிகாமல் திட்டமும் அளிக்கப்பட வேண்டும்.

முன்மொழிவானது ஆராய்ச்சி சமர்ப்பித்தலுக்கான தேர்வு உள்ளிட்ட பணியின் நோக்கு, முறை, கால அளவு, மற்றும் இதே தலைப்பில் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சி வேலைகளை பற்றின அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.ஸாஹாபீடீயா ஏற்கனவே செய்திருக்கும் களப்பணியுடன் சம்பந்தப்பட்டதாக திட்டம் இருக்க வேண்டும். https://www.Sahapedia.org/

3. குறைந்தபட்சம் 1500 சொற்களில் (ஆராய்ச்சிக்காக எழுதப்பட்ட) எழுத்து மாதிரி (முன்பு எழுதப்பட்ட கட்டுரை), அல்லது

விண்ணப்பதாரரின் படம் எடுக்கும் திரமை/வீடியோகிராபி (ஆவணப்படுத்தலுக்கான) திறமை அல்லது இரண்டின் திறன்களையும் குறிக்கும் ஒரு 5 முதல் 10 நிமிட வீடியோ கிளிப்பை காட்ட வேண்டும் (விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் ஆராய்ச்சி சமர்ப்பித்தலுக்கான தேர்வினைப் பொறுத்து)

5. நூற்பட்டியல் / இதே துறையில் ஏற்கனவே உள்ள நூல்கள் அல்லது ஆராய்ச்சி வேலைகளின் பட்டியல் 15 தலைப்புகளுக்கு மிகாமல்.

விண்ணப்பதாரர்கள்,மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட பின்னிணைப்புகளைக்  காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பின்னிணைப்பு I . ஃபெல்லோஷிப் குறித்த சுருக்கமான விளக்கம்.
பின்னிணைப்பு II . தேர்விற்கான அடிப்படை
பின்னிணைப்பு III. கால அளவு
பின்னிணைப்பு IV.படைப்பு உள்ளடக்கத்திற்கான வழிகாட்டுதல்கள்.
 பின்னிணைப்பு V. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்