சாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் 2020

விண்ணபிக்க அழைப்பு

ஆகஸ்ட் 02, 2020 அன்று முடிகிறது

நீங்கள் ஒரு ஆர்வலரா? மாணவரா? அல்லது ஆய்வாளரா? இதோ நமது கலாச்சாரப் பாரம்பரியத்துடன் செயல்படவும், இந்திய அறிவு மரபின் மீதான உங்கள் ஆர்வத்தினைப் பின்தொடர ஒரு வாய்ப்பு.

ஃபெல்லோஷிப் பற்றி

நமது கலாச்சாரப் பாரம்பரியத்துடன் செயல்பட மற்றும் இந்திய அறிவு மரபின் மீதான ஆர்வத்தினைப் பின்தொடர ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்குவதற்காக, சாஹாபீடியா அதன் ஃபெல்லாஷிப் திட்டத்தின் நான்காவது பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

சாஹாபீடியா - யுனெஸ்கோ ஃபெல்லோஷிப்பானது, உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான புலனாக பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியின் அங்கமாக இருப்பதோடு, அவற்றின் மீது வெவ்வேறு சமூகங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களின் அணுகலை அதிகரிக்கவும் முனைகிறது.   இணைப்பு 1. சாஹாபீடியா – யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் 2020 ஹச்.டி. பரீக்ஹ் பவுண்டேஷனால் ஆதரிக்கப்படுகிறது.

இந்த முன்னெடுப்பின் மூலம், ’ஃபெல்லோக்கள்’ பலதரப்பட்ட பண்பாட்டுத் தளங்களை ஆவணப்படுத்தவும், ஆராயவும் ஊக்குவிக்கப்படுவதோடு, அவர்களின் பங்களிப்புகளை மேம்படுத்த உதவும் வகையில் அறிஞர்களோடும்,  மற்றவர்களோடும்  கலந்துரையாடல் நிகழ  வாய்ப்புள்ளது. ஃபெல்லோக்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளும், ஆவணமாக்கலும், இணை வளத்திற்கு பங்காற்றும் வகையில், சாஹாபீடியா வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்படும்.

மொழிகள்

இந்த ஆண்டு பின்வரும் மொழிகளில் ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது - ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளம், மராத்தி, தமிழ் மற்றும் மளையாளம்.

தகுதி

ஃபெல்லோஷிப்கள், கலை, இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் பட்ட மேற்படிப்பு பயின்றவர்களுக்கும் அதற்கு மேலான தகுதியுடையவர்களுக்கும் வழங்கப்படும். இவற்றுக்கு இணையான அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். முன்னதாக துறை சார்ந்த அறிமுகமும், பணி அனுபவமும் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஃபெல்லோஷிப்கள் இந்திய வங்கிக் கணக்குடைய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.  கூடுதல் விவரங்களுக்கு இணைப்பு 5 ல் FAQ ஐ பாருங்கள்.

கால அளவு

ஃபெல்லோஷிப்கள், 30 அக்டோபர் 2020ல் தொடங்கி 30 மார்ச் 2021க்குள், அதாவது இருபத்து நான்கு வாரங்களுக்குள், முடிக்கப்பட வேண்டும்.  குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாமல் இருக்கும் ஃபெல்லோஷிப்கள் ரத்து செய்யப்படும். காலவரையறை குறித்து பின்னிணைப்பு 3ல் உள்ள விதிமுறைகளை விண்ணப்பதாரர்கள் வாசிக்கவும்.

வகைகள்

ஃபெல்லோஷிப்கள் ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், அல்லது இவ்விரு வகைகளின் கலவையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவரவர் வகைகளின் தேர்வைப் பொருத்து, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தங்களின் வழங்கல்களைத்
தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பாதாரர்கள் பின்னிணைப்பு 4ல் உள்ள சாஹாபீடியா உள்ளடக்க உருவாக்கத்திற்கான வழிகாட்டுதல்களை பார்க்கவும்

வழங்கல்கள்

ஒவ்வொரு ஃபெல்லோஷிப்கள் ஒரு கட்டாயமான வழங்கல் மற்றும் மூன்று தேர்வுகளைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும்போது, மூன்று வகையான வழங்கல்களை அடையாளம் காணலாம். கூடுதலாக, ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரரும் ஒரு நான்காவது வழங்கலைச் சமர்ப்பிக்க வேண்டும், அது தலைப்பு குறித்த கூடுதல் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான குறிப்புகள் பட்டியல் மற்றும் வளங்கள்/வழிகாட்டியாக இருக்கும். மற்ற மூன்று வழங்கல்களுக்கான தேர்வுகள் பின்வருமாறு.

வழங்கல் I:

  • சித்தரிக்கப்பட்ட முன்தோற்றம்/ அறிமுக கட்டுரை (3000 -4000 சொற்கள் 5-1- படங்களுடன்), அல்லது
  • சிறு ஆவணப் படம் (15-20 நிமிடங்கள் ஆங்கில துணைத்தலைப்புடன், அத்துடன் 500-800 சொற்களுடன் கதைச் சுருக்கம்)

வழங்கல் II:

  • இணைப்பு கட்டுரை (1500-2000 சொற்கள் 3-5 படங்களுடன்), அல்லது
  • படத் தொகுப்பு (30-50 படங்கள் தலைப்புடன்), அல்லது
  • படக் கட்டுரை (20 படங்கள் , படங்களை விளக்கும் 1000-1500 சொற்களுடன்)

ஒரு நிபுணர்/ஆராய்ச்சியாளர்/பயிற்சியாளருடன் உரையாடல் நேர்காணல் (1500 சொற்கள், குறைந்தபட்சம் 10 கே&ப உடன்), அல்லது

கூடுதலாக, உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தையும் வழங்க வேண்டும்.

நிதி  உதவி

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ 40,000 நல்களை வழங்கப்படுவார்கள், அது மூன்று தவணைகளில், குறிப்பிட்ட வழங்கலை முடிப்பதைப் பொருத்து வெளியிடப்படும். உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் ஃபெல்லோக்கள் கூடுதலாக ரூ 10,000 மொழிபெயர்ப்புக்காக பெறுவார்கள்.

விண்ணப்ப வழிகாட்டுதல்கள்

பின்வரும் உள்ளடக்கங்கள் விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக சமர்பிக்கப்பட வேண்டும்:

1. ரெசியூம் அல்லது கர்ரிகுலம் விடே

2. 1000-1500 சொற்களில் ஒரு முன்மொழிவு, 200-300 சொற்களில் ஒரு சுருக்கத்தையும் சேர்த்து

முன்மொழிவானது ஆராய்ச்சியின் நோக்கு, வழங்கல்கள்தேர்வு, முறை, கால அளவு, மற்றும் ஏற்கனவே உள்ள நூல்கள்/தலைப்பின் செய்யப்பட்ட பணிகள் மீதான அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

3. குறைந்த 1500 சொற்களில் (ஆராய்ச்சிக்காக) எழுத்து மாதிரி (முன்பு எழுதப்பட்ட கட்டுரை), அல்லது

ஒரு 5-10 நிமிட வீடியோ கிளிப் அது விண்ணப்பதாரரின் படம் எடுத்தல்/வீடியோகிராபி (ஆவணப்படுத்தலுக்காக) திறமைகளை அல்லது இரண்டின் திறன்களையும் காட்ட வேண்டும், வழங்கல்கள் தேர்வினைப் பொருத்து.

5. நூற்பட்டியல்/தலைப்பில் ஏற்கனவே உள்ள நூற்கள் அல்லது பணிகள் பட்டியல் 15 உருப்படிகள்/ தலைப்புகளுக்கு மிகாமல்.

விண்ணப்பதாரர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்னிணைப்பு 2, ஃபெல்லோஷிப்பின் கால அளவு பின்னிணைப்பு 3, மற்றும் சாஹாபீடியா உள்ளடக்க உருவாக்க வழிகாட்டுதல்கள் பின்னிணைப்பு 4 ஆகியவற்றை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பின்னிணைப்பு I . ஃபெல்லோஷிப் குறித்த சுருக்கமான விளக்கம்.
பின்னிணைப்பு II . தேர்விற்கான அடிப்படை
பின்னிணைப்பு III. கால அளவு
பின்னிணைப்பு IV.படைப்பு உள்ளடக்கத்திற்கான வழிகாட்டுதல்கள்.
 பின்னிணைப்பு V. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்