No Events Found In This Domain

Workspace

Sahapedia-UNESCO Fellowship 2018 Tamil

சாஹாபீடியா – யுனெஸ்கோ பெல்லோஷிப்

விண்ணபிக்க அழைப்பு

30வது ஜூன், 2018 அன்று விண்ணப்பக்காலம் முடிகிறது

நீங்கள் ஒரு ஆர்வலர், மாணவர் அல்லது ஆராய்ச்சி மாணவரா? இதோ நமது கலாச்சாரப் பாரம்பரியத்துடன் செயல்பட மற்றும் இந்தியாவின் அறிவு அமைப்புகள் மீதான உங்கள் ஆர்வத்தினைப் பின்தொடர ஒரு வாய்ப்பு.

 

பெல்லோஷிப் பற்றி

நமது கலாச்சாரப் பாரம்பரியத்துடன் செயல்பட மற்றும் இந்தியாவின் அறிவு அமைப்புகள் மீதான ஆர்வத்தினைப் பின்தொடர ஆர்வலர், மாணவர் மற்றும் ஆராய்ச்ச்சி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதற்காக, சாஹாபீடியா அதன் பெல்லாஷிப் திட்டத்தின் இரண்டாவது பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

புலனாகா கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் 2003 மாநாடு (இதன்பின் யுனெஸ்கோ 2003 மாநாடு என குறிக்கப்படுகிறது), “புலனாகா கலாச்சார பாரம்பரியத்தை, கலாச்சார பன்முகத்தன்மையின் முதன்மை ஊற்றாகவும நிலையான வளர்ச்சியின் உத்திரவாதமாகவும்”குறிப்பிடுகிறது. சாஹாபீடியா – யுனெஸ்கோ பெல்லோஷிப்கள்  - உள்ளூர், தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் – புலனாகா பராம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும், ஏமலும் சமூகங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கான அணுகலை அதிகரிக்கிறது. பின்னிணைப்பு 1. சாஹாபீடியா – யுனெஸ்கோ பெல்லோஷிப்கள் 2018 கலாச்சார அமைச்சகம், இந்திய அரசினால் ஆதரிக்கப்படுகிறது.

இந்த முன்னெடுப்பின் மூலம், பெல்லோஸ் பல்வேறு கலாச்சார அறிவுகளில் ஆவணப்படுத்தல் மற்றும் முக்கிய ஆராய்ச்சிகளை நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள், அத்துடன் அவர்களின் படைப்பிற்கு பங்களிக்கும் மேம்பட்ட வலைப்பின்னல் உடன் உரையாட ஊக்குவிக்கப்படுவார்கள். இணைய வளங்களுக்கு பங்களிப்படுவதற்காக, பெல்லோக்களால் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல்  சாஹாபீடியா வலைப் போர்டலில் பதிப்பிக்கப்படும்.

 

மொழிகள்

இந்த ஆண்டில் பின்வரும் மொழிகளில் பெல்லோஷிப் வழங்கப்பட உள்ளது – ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளம், மராத்தி, தமிழ் மற்றும் மலையாளம். நாங்கள் உள்ளூர் மொழிகளில் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தலை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம்.

 

தகுதி

பெல்லோஷிப்கள் , மானுடவியல் மற்றும் சமூக அறிவியலில் பரந்து பட்ட அளவில் பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கு மேல் தகுதி கொண்ட அல்லது அதற்கு இணையான அனுபவம் கொண்டவர்களுக்கானது. விண்ணப்பத்தின் பேரில் பாடத்துடன் முன்னதாக தொழில்முறை அல்லது கல்வி அறிமுகம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம். பெல்லோஷிப்கள் இந்திய வங்கிக் கணக்கு உடைய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கூடுதல் விவரங்களுக்கு,பின்னிணைப்பு 5 ல் FAQ ஐ பாருங்கள்.

 

கால அளவு

பெல்லோஷிப்கள் 15 ஆகஸ்ட் 2018 மற்றும் 15 பிப்ரவரி 2019 க்கு இடையே இருபத்து நான்கு (24) வாரங்கள் கால அளவிற்குள் முடிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பெல்லோஷிப் வேலைகளை முடிக்கத் தவறினால் பெல்லோஷிப் ரத்து செய்யப்படலாம். விண்ணப்பதாரர்கள் பின்னிணைப்பு 3 ல் காட்டப்பட்டுள்ள காலஅளவினைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

வகைகள்

பெல்லோஷிப்கள் ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், அல்லது இரண்டு வகைகளின் கலவைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வகைகளின்தேர்வைப் பொருத்து, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தங்களின்  வழங்கல்களைத் தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பாதாரர்கள் பின்னிணைப்பு 4ல் உள்ள சாஹாபீடியா உள்ளடக்க உருவாக்கத்திற்கான வழிகாட்டுதல்களையும் பார்க்கலாம்.

 

வழங்கல்கள்

ஒவ்வொரு பெல்லோஷிப்பும் ஒரு கட்டாயமான வழங்கல் மற்றும் மூன்று தேர்வுகளைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும்போது, மூன்று வகையான வழங்கல்களை அடையாளம் காணலாம். கூடுதலாக, ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரரும் ஒரு நான்காவது வழங்கலைச் சமர்ப்பிக்க வேண்டும், அது தலைப்பு குறித்த கூடுதல் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான குறிப்புகள் பட்டியல் மற்றும் வளங்கள்/வழிகாட்டியாக இருக்கும். மற்ற மூன்று வழங்கல்களுக்கான தேர்வுகள் பின்வருமாறு.

வழங்கல் I:

சித்தரிக்கப்பட்ட முன்தோற்றம்/ அறிமுக கட்டுரை (3000 -4000 சொற்கள் 5-1- படங்களுடன்), அல்லது

சிறு ஆவணப் படம் (15-20 நிமிடங்கள் ஆங்கில துணைத்தலைப்புடன், அத்துடன் 500-800 சொற்களுடன் கதைச் சுருக்கம்)

வழங்கல் II:

இணைப்பு கட்டுரை (1500-2000 சொற்கள் 3-5 படங்களுடன்), அல்லது

படத் தொகுப்பு (30-50 படங்கள் தலைப்புடன்), அல்லது

படக் கட்டுரை (20 படங்கள் , படங்களை விளக்கும் 1000-1500 சொற்களுடன்)

வழங்கல் III:

ஒரு நிபுணர்/ஆராய்ச்சியாளர்/பயிற்சியாளருடன் உரையாடல் நேர்காணல் (1500 சொற்கள், குறைந்தபட்சம் 10 கே&ப உடன்), அல்லது

ஒரு நிபுணர்/ஆராய்ச்சியாளர்/பயிற்சியாளருடன்  வீடியோ நேர்காணல் (20-30 நிமிடங்கள்).

 

கூடுதலாக, உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தையும் வழங்க வேண்டும்.

 

நிதி உதவி

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ 40,000 நல்களை வழங்கப்படுவார்கள், அது மூன்று தவணைகளில், குறிப்பிட்ட வழங்கலை முடிப்பதைப் பொருத்து வெளியிடப்படும். உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் பெல்லோக்கள் கூடுதலாக ரூ 10,000 மொழிபெயர்ப்புக்காக பெறுவார்கள்.

 

விண்ணப்ப வழிகாட்டுதல்கள்

பின்வரும் உள்ளடக்கங்கள் விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக சமர்பிக்கப்பட வேண்டும்:

1. ரெசியூம் அல்லது கர்ரிகுலம் விடே (தற்குறிப்பு)

2. 1000-1500 சொற்களில் ஒரு முன்மொழிவு, 200-300 சொற்களில் ஒரு சுருக்கத்தையும் சேர்த்து

முன்மொழிவானது ஆராய்ச்சியின் நோக்கு, வழங்கல்கள்தேர்வு, முறை, கால அளவு, மற்றும் ஏற்கனவே உள்ள நூல்கள்/இதே தலைப்பில் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சி வேலைகளை பற்றின அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

3. குறைந்தபட்சம் 1500 சொற்களில் (ஆராய்ச்சிக்காக எழுதப்பட்ட) எழுத்து மாதிரி (முன்பு எழுதப்பட்ட கட்டுரை), அல்லது

ஒரு 5-10 நிமிட வீடியோ கிளிப் அது விண்ணப்பதாரரின் படம் எடுத்தல்/வீடியோகிராபி (ஆவணப்படுத்தலுக்காக) திறமைகளை அல்லது இரண்டின் திறன்களையும் காட்ட வேண்டும் (விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் வழங்கல்கள் தேர்வினைப் பொருத்து)

4. நோக்க அறிக்கை 500 சொற்களில்

நோக்க அறிக்கையானது, சாஹாபீடியோவுடன் விண்ணப்பதாரரின் பணிகளின் இணக்கம் மற்றும் அவர்களின்

பணிகளை சாஹாபீடியா உள்ளடக்க வெளியீட்டு வடிவிற்கு மாற்றுவதின் இணக்கத்தை நிறுவ வேண்டும். விண்ணப்பதாரரின் படிப்பு மற்றும் வேலை அனுபவ சுருக்கமும் சேர்க்கப்படலாம்.

5. நூற்பட்டியல் / இதே துறையில் ஏற்கனவே உள்ள நூல்கள் அல்லது ஆராய்ச்சி வேலைகளின் பட்டியல் 15 தலைப்புகளுக்கு மிகாமல்.